குறுந்தொகை நூற்குறிப்பு எழுதுக.
Answers
1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
2. அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது.
3. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. உ
4. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்.
5. முதலில் தொகுக்கப்பட்ட தொகைநூல்.
6. இயற்றியவர்: வெள்ளிவீதியார்.
7. தொகுத்தவர்: பூரிக்கோ.
8. கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.
Answer:
- எட்டு தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
- பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
- வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
- உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந் தொகையே.
- இந்நூலின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
- திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந் தொகை பாடலே.
- இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
Explanation:
குறுந்தொகை
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. . ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
பாடியோர்
இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.இந்நூலில் அமைந்துள்ள பல் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
நூலமைப்பு
நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல்,கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னனியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.
Learn more information about the link:
- https://brainly.in/question/47193389
- https://brainly.in/question/4021275