Physics, asked by chemistry2109, 22 days ago

நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு.

Answers

Answered by dheepikarameshkumar
0

Answer:

மின்னழுத்தம் (voltage) என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம். ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை (துளை) இருந்தால், அவ்வோட்டையின் வழியே நீர் பீய்ச்சி அடிக்கும். நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓட்டைக்கு மேலே உள்ள நீரின் அழுத்தம் தான். நீரின் அழுத்தம் ஏற்படுவதற்கு தரையை நோக்கி ஈர்க்கும் நிலவீர்ப்பு அல்லது புவியீர்ப்பு விசை இருப்பதால் தான். இதே போல மின்தன்மை (மின்னேற்பு அல்லது மின்னூட்டம்) பெற்ற பொருட்களைச் சுற்றி மின் விசை தரும் மின்புலம் உள்ளது. இம்மின்புலத்தில் இருந்து இந்த மின்னழுத்தம் எழுகின்றது. இந்த மின்னழுத்தம் குறைந்த மின்னழுத்தமுடைய பொருளுடன் இணையும் போது மின்னோட்டமும் உண்டாகும். மின் விளக்கு எரிவதற்கு, மின் அழுத்ததால் உண்டாகும் மின்னோட்டம் உதவுகின்றது.

மின்னழுத்தை வோல்ட்டு என்னும் அலகால் அளக்கிறார்கள் மின்துறையாளர். ஒரு வோல்ட்டு மின் அழுத்தத்தை ஒரு 10 ஓம் கொண்ட தடையத்தின் இரண்டு முனைக்கும் இடையே பொருத்தினால், அந்த தடையத்தின் வழியாக 1/10 ஆம்பியர் அளவு மின்னோட்டம் நிகழும். இந்த மின்னழுத்தம், மின்னோட்டம், தடை என்பவற்றினிடையே உள்ள தொடர்பை சார்ச்சு சைமன் ஓம் என்பாரின் ஓமின் விதியால் அறியப்படுகின்றது. மின்னழுத்தம் = (மின்தடை) x (மின்னோட்டம்). இதனையே குறியீடுகள் வழி, V = மின்னழுத்தம் R = மின்தடை I = மின்னோட்டம் என்றால்V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம்.

Explanation:

pls make as brainlist

Similar questions