ஒளிஇழை பற்றிச் சிறு குறிப்பு வரைக.
Answers
Answer:
ஒளியிழை
ஒளியிழை அல்லது ஒளிநார் அல்லது கண்ணாடி ஒளியிழை (optical fibre அல்லது optical fiber) என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியைக் கடத்தும் இழை. இது ஓர் அலைநடத்தி போன்று தொழிற்பட்டு இழையின் இரு முனைகளுக்கிடையேயும் ஒளியைக் கடத்தும் தன்மையுடையது.[1] பயன்பாட்டு அறிவியல், பொறியியல் ஆகிய நெறிகளில் ஒளியிழைகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் இழை ஒளியியல் (fiber optics) என அழைக்கப்படுகின்றது. இதன் பயன்பாடு கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்படுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப் பெறுகின்றன. அதே போல உடலின் உள்ளுறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் ஒளியிழைநோக்கி (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது.