போரின் அணு மாதிரியின் கூற்றுக்களை பற்றி விளக்குக?
விடை:ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் ‘ஆர்பிட்’ எனப்படும் நிலையான வட்டப் பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன.சுற்றி வரும் எலக்ட்ரான்கள் ஆற்றலை இழப்பதோ, ஏற்பதோ இல்லை வட்டப்பாதைகள் 1,2,3,4 அல்லது K,L,M,N என பெயரிடப்பட்டுள்ளன.
ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும்அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2N2
எலக்ட்ரான் ஆற்றலை உறிஞ்சும் போது உயர் ஆற்றல் மட்டத்திற்கும், ஆற்றலை வெளியிடும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திற்கும் இடம் பெயருகின்றன. bye guys.time is 10:34

Answers
Answer:
Explanation:
போரின் அணு மாதிரியின் கூற்றுக்கள்
ரூதர்ஃபோர்டின் அணு மாதிரியின் குறை
ரூதர்ஃபோர்டின் அணு மாதிரி அணுவின் நிலைப்புத் தன்மையினை பற்றிய சரியாக விளக்கவில்லை.
போரின் அணு மாதிரி
அணுவின் நிலைப்புத்தன்மையை சரிசெய்ய ரூதர்ஃபோர்டின் அணு மாதிரியில் சில திருத்தங்களை செய்து புதிய அணு மாதிரி கொள்கையை வெளியிட்டார்.
நீல்ஸ் போர் ஹைட்ரஜன் அணுவின் வெற்றிகரமான ஒரு மாதிரியை உருவாக்கினார்.
போரின் அணு மாதிரியின் கூற்றுக்கள்
ஓர் அணுவில் எலக்ட்ரான் நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவை சுற்றி வருகின்றன.
இவ்வட்டப் பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் என்று கூறப்படுகிறது.
ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருவதால் எலக்ட்ரான் ஆற்றலை இழக்கவோ அல்லது ஏற்கவோ இல்லை.
வட்டப்பாதைகள் 1,2,3,4,அல்லது K,L,M,N என்று பெயரிடப்படுகிறது.
இந்த எண்கள் குவாண்ட எண்கள் (n) என அழைக்கப்படுகிறது.