நுண்பொருளியல் என்றால் என்ன
Answers
நுண்ணியல் பொருளாதாரம்:
அருகாமையில் கிடைக்கும் ஆதாரங்களை / வளங்களைக் கொண்டு, எளிமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனி மனிதர்களும், குழுக்களும் பொருட்களை, சேவைகளை எப்படி உற்பத்தி செய்கிறார்கள், நுகர்கிறார்கள் என்பதைப்பற்றி அறியும் பொருளாதார அறிவியல். பார்க்க: பொருத்தமான தொழில்நுட்பம் - ஒரு பூகோளப் பிராந்தியத்தின் சமூகப் பொருளாதார நிலைக்கேற்ப, சுற்றுச் சூழலுக்குப் பொருத்தமாகவும், அந்தப் பகுதி மக்களால் எளிதில் கையாளத்தக்கதான தொழில்நுட்பம். சூமேகேர் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்ட 'சிறியதே அழகு' என்ற கருத்தாக்கத்தின் நீட்சியாக, சமூகப் பொருளாதார, அரசியல், தொழில்நுட்பத் தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. சிறிய அளவிலான, பரவலாக்கப்பட்ட, கைத்தொழில் சார்ந்த, குறைந்த அளவு சக்தியை நுகர்கின்ற, சுற்றுச் சூழலைப் பாதிக்காத, உள்ளூர் மக்களால் கையாளமுடிந்த, மக்களை மையப்படுத்திய தொழில் நுட்பமே பொருத்தமான தொழில்நுட்பம் என்றழைக்கப்படுகின்றது. Macroeconomics - பருவினப் பொருளியல், விரிநிலைப் பொருளியல், பேரினப் பொருளியல் - பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது உருவாக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும். உற்பத்தி, பகிர்வு பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதிலும், 1776 ல் வெளிவந்த ஆடம் ஸ்மித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (நாடுகளின் செல்வம்) எனும் நூலில், ஸ்மித் அனைத்துப் பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெறச் செய்தார். பருப்பொருளியல் / பருவினப் பொருளியல் / விரிநிலைப் பொருளியல் (Macroeconomics) என்பது, பொருளியலின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று நுண்பொருளியல் (microeconomics) ஆகும். பருப்பொருளியல் நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அதனுடைய செயல்திறன் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய எந்த ஒரு விஷயமும் பருவினப் பொருளியல் சார்ந்ததாகும். பருப்பொருளியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வேலையின்மை வீதம், விலைச் சுட்டெண் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தேசிய வருமானம், நுகர்வு, வேலையின்மை, பணவீக்கம், சேமிப்பு, முதலீடு, பன்னாட்டு வணிகம், பன்னாட்டு நிதியம் போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை விகிதம ஆகியவற்றைக் குறைக்க ஆரசாங்கம் தீட்டும் செயல்திட்டம், நாட்டின் நிதிக் கொள்கை , ஒரு நாட்டின் பண அமைப்பைக் கட்டுபடுத்த மத்திய வங்கி தீட்டும் பணவியல் கொள்கை , வணிகச் சுழற்சிகள் , பணவீக்கம் மற்றும் பணவாட்டம் இவை அனைத்துமே பருவினப் பொருளியல் கீழ் வருவனவாகும்.