French, asked by sb914102, 1 month ago

அக்னி சிறகுகள் புத்தகத்தின் கருத்துகள்​

Answers

Answered by Anonymous
1

Answer:

hii dear friend

Explanation:

I can write tamil

Answered by ukavitha7568
1

Answer:

அக்னிச் சிறகுகள் (Wings of Fire) என்பது முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் பேராசிரியர் அப்துல்கலாமின் சுயசரிதைப்புத்தகமாகும். இப்புத்தகத்தை அப்துல் கலாம் மற்றும் அவர் நண்பர் அருண் திவாரி ஆகியோர் எழுதினர். இப்புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. மு. சிவலிங்கம் என்பவர் இதனை தமிழில் மொழிபெயர்த்தார். இப்புத்தகம் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒரியா, மராத்தி, சீனம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

அப்துல் கலாம் அவர்கள் தான் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார் . அதில் மிக முக்கியமானது அவர் ராமேஸ்வரத்தில கண்ட இந்து முசுலீம் ஒற்றுமை பற்றியது .

அப்துல் கலாம் அவர்கள் முஸ்லீம் மதத்தினை சார்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே . கலாம் அவருடைய அப்பாவும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமண சாஸ்திரி என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர் . தந்தைகளுடைய நட்பு மகன்களிடமும் தொடர்ந்திருக்கிறது .

வகுப்பில் ஒருமுறை சாஸ்திரி அவர்களுடைய மகனும் கலாமும் அருகருகே அமர்ந்திருக்க , ஆசிரியர் கலாம் அவர்களை கண்டித்து பின்னால் அமரச்சொல்லி இருக்கிறார் . இதனால் மனமுடைந்து போன சாஸ்திரி அவர்களின் மகன் அழுதே விட்டார் . பின்னர் சாஸ்திரி அவர்களுக்கு விபரம் தெரியவர “ஆசிரியரை இதுபோன்ற வேற்றுமைகளை புகுத்த கூடாது ” என கண்டித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார் .

தன்னுடைய சொந்த ஊரில் இந்து முஸ்லீம் உறவு இருந்ததை போல பின்னாளில் தான் சென்ற ஊர்களில் இல்லையெனவும் குறிப்பிட்டு இருக்கிறார் .

இதனைப்போல கலாம் வாழ்வில் நடந்த பல சுவராஸ்யமான தகவலை இந்த புத்தகத்தில் படிக்கலாம் .

I hope it may help you

thanks

Similar questions