பொதிகை மலை - இலக்கணக் குறிப்பு தருக.
Answers
Answered by
0
பொதிகைமலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.
விளக்கம்:
- பொதுப்பெயரோடு சிறப்புப்பெயரோ அல்லது சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ இணைந்து ஒரு பொருளை உணர்த்த வரும் சொற்களை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்கிறோம்.
- இவற்றில் இரு சொற்களுக்கும் இடையில் "ஆகிய" என்னும் உருபு தொக்கி நிற்கும்.
- தொக்கி என்றால் மறைந்து என்று பொருள்படும். அதாவது மறைந்து காணப்படும்.
எடுத்துக்காட்டு:
- பலாமரம் என்ற சொல்லில் பலா என்பது சிறப்புப் பெயர். மரம் என்பது ஒரு பொதுப்பெயர். பலாவாகிய மரம் என்று வர வேண்டும். இதில் ஆகிய என்ற சொல் மறைந்து வந்துள்ளது. ஆதலால் பலாமரம் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
- சாரைப்பாம்பு
- முத்துப்பல்
- தென்னைமரம்
- தாமரைப்பூ
- மாமரம்
இவை எல்லாம் இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
Similar questions