English, asked by seenuovi89, 1 month ago

வாக்கியத்தில் அமைந்து மகிழ்ச்சி​

Answers

Answered by josnaelsajoseph
0

Answer

வாக்கியத்தில் அமைத்தல் பயிற்சிகள்

வாக்கியத்தில் அமைத்து எழுதுதல்   (மாதிரி   விடைகள்)

1.       கரைத்துக் குடித்தாள்  : வரலாற்று ஆய்வாளராக விரும்பிய ராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் கரைத்துக் குடித்தாள்.

2.       வாகை சூடினான்  : சிங்கப்பூர் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்து வெற்றி வாகை சூடினான்.

3.       முனைப்புடன் :  சாதாரணநிலைத் தேர்வில் சிங்கப்பூரிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டான் மாறன்.

4.       தணியவேயில்லை  : ராமநாதனுக்கு வயது 80 ஆகிய பிறகும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தணியவேயில்லை.

5.       கைநழுவிப்போனது  :எல்லா தகுதிகளும் முத்துவுக்கு இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குக் காலதாமதமாகச் சென்றதால் அந்தப் பதவி கைநழுவிப்போனது.

6.       சாதனையாளர்  : நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு சாதனையார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

7.       ஆயத்தமாகிவிட்டார் : போட்டியைப்பற்றி அறிவித்தவுடன் அதில் கலந்துகொள்ள ராமு ஆயத்தமாகிவிட்டார்.

8.       தடங்கலுமின்றி :  எந்தத் தடங்கலுமின்றி ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பது சாத்தியம் மில்லை

9.       அகால மறைவுக்கு :  ஆந்திர முதல்வரின் அகால மறைவுக்குக் காரணம் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதே காரணமாகும்.

10.      அஞ்சலி  : கல்பனா சாவ்லாவின் அகால மறைவுக்கு உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

11.      இலட்சியப்பாதை  : நமது இலட்சியப்பாதையை நோக்கி நடைபோடும் போது தடைகள் வந்தால் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

12.      தலைமுறையினர்: இன்றைய தலைமுறையினர் பல வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

13.      இலக்கை :  நம் இலக்கை அடைய எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

14.      மேகக்கூட்டம்  :  வானில் கருமேகக்கூட்டம் கான மயில்களை ஆடவைப்பதில் வியப்பில்லை.

15.      எள்ளி நகையாடி  : பிறரை எள்ளி நகையாடி அதில் இன்பம் காணும் சிலரை எனக்குப் பிடிப்பதில்லை.

16.      நாடுவார்கள் :  தங்களுக்கு மக்களின் உதவி தேவைப்படும்போதே சிலர் அவர்களை நாடுவார்கள்.

17.      நெறியோடு  : நேர்மை தவறாது, பொய்யுரைக்காது நெறியோடு வாழ்ந்த மன்னர்கள் பலரின் வாழ்கை வரலாறுகளை நாம் படிக்கின்றோம்.

18.      கடிந்துரைப்பது : நண்பர்கள் தவறிழைக்கும்போது அவர்களைக் கடிந்துரைப்பது தவறில்லை.

19.      நயம்பயக்கும்  : மற்றவர்களுக்கு நயம்பயக்கும் செயலைச் செய்யாவிட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்யாமலிருப்பதே நன்று.

20.      உய்த்துணர: இலக்கிய இன்பத்தை உய்த்துணர அவ்விலக்கியங்களில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும்.

Answered by cbtanushree19
1

Answer:

உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் என்னை சிக்கலில் இருந்து காப்பாற்றியதில் மகிழ்ச்சி. நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் உங்களை சிக்கலில் ஆழ்த்தியதற்கு வருந்துகிறேன்.

Explanation:

i am also born in TAMIL NADU so i know TAMIL

Similar questions