களை பறிக்கும் பருவம் எது
Answers
Answered by
22
Answer:
பயிர் அறுவடையாகும்போது களைகளின் விதைகள் தானியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சந்ததியை பெருக்குகின்றன.
பெரும்பாலான களைகள் விதையில்லா இனப்பெருக்கம் மூலம் வேகமாக பெருகுகின்றன
Answered by
0
Answer:
களை பறிக்கும் பருவம்-நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரித்தது. அதனைக் கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும் பருவம் என்றனர்.
Explanation:
- உழவுத்தொழிலில் நாற்று நடுவது மட்டும் முக்கியமன்று.
- உற்ற காலத்தில் நாற்றுடன் வளரும் களைகளை அகற்ற வேண்டியது இன்றியமையாது ஆகும்.
- களை என்பது வயலில் வளரும் தேவையற்ற செடிகளாகும். அவை வயலில் வளர்ந்து பயிர்களுக்குச் செல்லும் நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்சிக்கொள்கின்றன.
- இதன்மூலம் பயிர்களின் வளர்ச்சியை பெரிதளவில் பாதிக்கின்றன. இக்களைகள் வளர்வதால் பயிர்களுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
- இதனால் பெரிதளவில் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
- எனவே இக்களைகளை உற்ற நேரத்தில் அகற்ற வேண்டியது தலையாய கடமை ஆகும்.இதற்காக நம் முன்னோர் உருவாக்கியதே களை பறிக்கும் பருவம் ஆகும்.
- களை பறிக்கும் பருவம் என்பது நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிக்கும் காலம் ஆகும்
- அதுவே களைபறிக்க உற்ற காலம் ஆகும். அக்காலத்தில் பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் களைகளை களைந்து விளைச்சலை மேம்படுத்த முனைவர்.
#SPJ2
Similar questions