India Languages, asked by JOHNBROUGH, 15 hours ago

வல்லினம் மிகும் இடங்கள் மூன்றினைச் சன்றுைடன். விளக்குக​

Answers

Answered by jahnu12keerthika
3
வல்லினம் மிகும் இடங்கள்


1. அ, இ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வரும் வல்லினங்களாகிய க, ச, த, ப மிகும்.


அ + பையன்

-

அப்பையன்

இ + பெண்

-

இப் பெண்

எ + திசை

-

எத்திசை

2. அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி? என்ற சுட்டு, வினாச் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.


அந்த + பெட்டி

-

அந்தப்பெட்டி

இந்த + பழம்

-

இந்தப் பழம்

எந்த + கோயில்

-

எந்தக் கோயில்

அங்கு + கண்டேன்

-

அங்குக் கண்டேன்

எங்கு + போனார்

-

எங்குப் போனார்

அப்படி + கேள்

-

அப்படிக் கேள்

எப்படி + போனார்

-

எப்படிப் போனார்?

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.


நூலை + படி

-

நூலைப் படி

பூவை + சூடு

-

பூவைச் சூடு

4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.


தோழனுக்கு + கொடு

-

தோழனுக்குக் கொடு

ஊருக்கு + செல்

-

ஊருக்குச் செல்

5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.


தண்ணீர் + பானை

-

தண்ணீர்ப் பானை

மரம் + பெட்டி

-

மரப் பெட்டி

சட்டை + துணி

-

சட்டைத் துணி

விழி + புனல்

-

விழிப்புனல்.

6. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.


பச்சை + கிளி

-

பச்சைக் கிளி

வெள்ளை + குதிரை

-

வெள்ளைக் குதிரை

7. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.


தாமரை + பூ

-

தாமரைப் பூ

சாரை + பாம்பு

-

சாரைப் பாம்பு

Similar questions