ஆர்க்கிபாக்டீரியம் எது
Answers
Answer:
மெத்தனோ பாக்டீரியம்
ஆர்க்கி பாக்டீரியம்
ஆர்க்கி பாக்டீரியம் என்பது ஒரு பழமையான தொல் உட்கரு உயிரி ஆகும்.
இவை வெப்ப ஊற்றுகள், அதிக உப்புத் தன்மை முதலிய மிக கடுமையான சூழ்நிலைகளில் வாழ்பவை.
இவை பெரும்பாலும் வேதிய தற்சார்பு ஊட்டமுறையினை கொண்டவை.
ஆர்க்கி பாக்டீரியத்தின் செல் சவ்வில் கிளிசரால், ஐசோஃபுரோபைல் ஈதர்கள் காணப்படுவது இதன் தனிச் சிறப்பு ஆகும்.
கிளிசரால், ஐசோஃபுரோபைல் ஈதர்கள் கொண்ட சிறப்புமிக்க வேதிய அமைப்பு ஆனது, செல் உறையில் இருப்பதால் செல் சுவரினை தாக்கும் உயிர் எதிர்ப்பொருள், கரைக்கச் செய்யும் பொருட்களில் இருந்து செல்களுக்கு எதிர்ப்புத் தன்மையினை அளிக்கின்றன.
ஆர்க்கி பாக்டீரியத்திற்கு உதாரணமாக மெத்தனோ பாக்டீரியம், ஹாலோ பாக்டீரியம், தெர்மோ பிளாஸ்மா முதலியனவற்றினை கூறலாம்.