India Languages, asked by chiragmehta4801, 1 year ago

தமிழ் வளர்த்த சான்றோர் மனோன்மணியம் பெ. சுந்தரனாரைப் பற்றி எழுதுக எட்டாம் வகுப்பு பாடப் பகுதி

Answers

Answered by Sumithakothandaraman
2

Answer:

Follow and brainlist

Explanation:

‌தமிழறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள்

‌26.4.1897

‌நம் செந்தமிழ் மொழிக்கு முத்தமிழ் எனப்பெயருண்டு. இயல் , இசை, கூத்து அல்லது நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரித்து தமிழ் தொன்று தொட்டு அழைக்கப்பட்டு வருகிறது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இயல், இசையை விட நாடகத்தமிழ் நலிவுற்றுக் காணப்பட்டது. இதை எண்ணி தத்துவப் பேராசிரியர் ஒருவர் மனம் வருந்தினார்.

‌தொல்காப்பியம் குறிப்பிடும் “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” கருத்தையும், பட்டினப்பாலை குறிப்பிடும் “பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் ” பாடலை அறிந்த போதும், குறுந்தொகையில் வரும் “நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்து விசிவீங்கு இன்னியங் கடுப்ப” பாடலை வாசித்த போதும் அந்த தத்துவப் பேராசிரியருக்கு புது உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது. நாடகத் தமிழுக்கு உயிரூட்டுவதே தமது முதற்கடமையாக எண்ணி, தானே “மனோன்மணீயம்” எனும் பெயரில் நாடக நூல் ஒன்றை இயற்றி வெளியிட்டார்.

‌நாடக மறுமலர்ச்சிக்கு திருப்புமுனையாக அந்நூல் வித்திடும் என்று அவரே எண்ணியிராத வேளையில், நாடகத் தமிழுலகம் அந்நூலை உயர் தமிழ்ச் சொத்தாக அறிவித்ததோடு, அந்த தத்துவப் பேராசிரியரை உச்சி மோந்து கொண்டாடியது. பிறகு அந்த தத்துவப் பேராசிரியர் வரலாற்றுத் துறைக்கும், தமிழ்த்துறைக்கும் வழிகாட்டியாக உயர்வு அடைந்தார். அவர் வேறு யாருமல்ல; நாமெல்லாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தந்த “மனோன் மணீயம்” சுந்தரனார் தான்.

‌‌இவர் அன்றைய திருவிதாங்கூர் சமசுதானத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 4.4.1855இல் பெருமாள் பிள்ளை – மாடத்தி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தையார் மதுரை சோமசுந்தரக் கடவுளின் நினைவாக சுந்தரர் எனப் பெயரிட்டார். நாஞ்சில் நாட்டை பூர்விகமாக கொண்ட இவரின் தந்தையார் தொழில் நிமித்தம் காரணமாக ஆலப்புழைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.

‌சுந்தரர் ஐந்து வயதுக்குள்ளேயே தமது தந்தையாரிடமிருந்து திருவாசகம், தேவாரம் ஆகிய பாடல் பாசுரங்களையும், திருக்குறள், நாலடியார், ஆத்திச் சூடி , கொன்றை வேந்தன் முதலிய அறநெறி நூல்களையும் கற்றுத் தெளிந்தார். பின்னர் ஆலப்புழையில் இருந்த ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்து படித்தார். உயர்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்த பிறகு திருவனந்தபுரம் அரசர் பாலராமவர்மன் அரசர் கல்லூரியில் (தற்போது திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகம்) சுந்ரனார் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அரசுத் தேர்வில் முதன் மாணாக்கராக தேர்வு பெற்று கல்லூரி நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெற்றார். 1876இல் தமது 21-ஆம் வயதில் பி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்று பட்டம் பெற்றார்.

‌அக்கல்லூரியில் மேல்படிப்பை தொடர சுந்ரனார் விரும்பிய போது அக்கல்லூரி முதல்வர் இராஸ் என்பவர் சுந்தரனாரின் கற்கும் தனித்த ஆற்றலைக் கண்டு வியந்து நேரில் அழைத்தார். மேற்படிப்பை படித்துக் கொண்டே தத்துவப் பேராசிரியராக பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார்.

‌திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ் பள்ளிக்குத் தலைமையாசிரியாகப் பணியாற்றும் வாய்ப்பு சுந்தரனாருக்கு கிடைத்தது. அப்பள்ளியின் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வங் கொண்ட அவர் அப்பள்ளியை திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியாக மாற்றி அதன் முதல்வராக 1877 முதல் 1879 வரை பணியாற்றினார்.

‌அவர் பணியாற்றிய திருநெல்வேலி சைவத்திற்கும், தமிழுக்கும் பெயர் பெற்றது. அங்கு நடக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு , தாமும் மேடை நிகழ்வுகளில் உரை நிகழ்த்தினார். தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளூர் இதழ்களில் தொடர்ந்து எழுதி தமிழறிஞர்களின் பேராதரவைப் பெற்றார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கோடக நல்லூரில் உள்ள சுந்தர சுவாமிகள் என்பவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டார். சமய நெறி, வேதாந்தம், சித்தாந்தம், தத்துவம் ஆகியவற்றில் தமக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்துக் கொண்டார்.

‌‌சுந்தர சுவாமிகளை தன் ஞான குருவாகவே ஏற்றுக் கொண்ட சுந்தரனார் தனது நாடக நூலான மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பை வழங்கி அவருக்கு சிறப்பு செய்தார்.

‌1877இல் சிவகாமி அம்மையாரை திருமணம் செய்து கொண்டு இல்லறம் கண்டார். 1879இல் திருவனந்தபுரம் அரசர் கல்லூரி தத்துவப் பேராசிரியர் இராபர்ட் ஹார்வி என்பவர் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகி தாயகம் செல்ல முடிவெடுத்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் சுந்தரனார் மீண்டும் தத்துவப் பேராசிரியரானார்.

‌அப்போது தத்துவத்துறைப் பேராசியருக்கு நாடகத்தமிழ் மீது காதல் பிறந்தது. அவர் காலத்தில் நடைபெற்ற நாடகங்கள் அனைத்தும் சமசுகிருதம், தெலுங்கு, ஆங்கிலக் கலப்போடு அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்தன. மேலைப் பண்பாட்டை பிரதிபலிப்பவையாக அந்த நாடகங்கள் அமைந்திருந்தன.

Similar questions