உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் இடையூறுகளைக் குறிப்பிட்டு, புதிய மின்விளக்குகளைப் பொருத்தும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
just answer if you know
Answers
Answer:
அனுப்புநர்
அ. தமிழ்,
6, திருவள்ளுவர் தெரு,
சங்கரலிங்கபுரம்,
விருதுநகர் (மாவட்டம்).
பெறுநர்
மின்வாரிய அலுவலர்,
மின்வாரிய அலுவலகம்,
விருதுநகர்.
மதிப்பிற்குரிய அய்யா,
பொருள்: பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தர வேண்டுதல் குறித்து…
வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாகக் குடியிருந்து வருகிறேன். எங்கள் தெருவில் சுமார் 100 வீடுகள் உள்ளன. 200 மீட்டர் நீளமுள்ள எங்கள் தெருவில் 4 மின் கம்பங்கள் உள்ளன. அதில் இரண்டு மின் கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன.
அந்தப் பகுதி இருட்டாக இருப்பதால் திருடர்கள் நடமாட்டம் இருக்கிறது; நச்சு பூச்சிகளின் தொல்லையும் இருக்கின்றது. இதனால், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
இதனைத் தவிர்க்க, பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தருமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
உண்மையுள்ள,
அ. தமிழ்
இடம் : சங்கரலிங்கபுரம்
நாள் : 24.09.2020
உறைமேல் முகவரி:
பெறுநர்
மின்வாரிய அலுவலர்,
மின்வாரிய அலுவலகம்,
விருதுநகர்.