பாரதியாரின் பெண் விடுதலை பத்தி எழுதுக?
Answers
Explanation:
6.5 'பெண் விடுதலை': பாரதியின் கருத்துகள்

அரசியல், சமூக, பொருளாதார விடுதலைகளுக்குத் தந்துள்ள முதன்மையைப் பாரதியார் பெண் விடுதலைக்கும் தந்துள்ளார். பெண் விடுதலை, பெண்கள் விடுதலைக் கும்மி எனக் கவிதையில் பாடிய அவர், 'பெண் விடுதலை' என்ற தலைப்பில் மூன்று தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை
கற்பு நெறியை ஆண், பெண் இருவர்க்கும் பொதுவாக்கிக் 'கற்பு நிலை' என்று கவிதைகளில் பாரதியார் பாடினார். தம் கட்டுரைகளிலும் கதைகளிலும் பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் பலவிதமான கொடுமைகளைக் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். பெண்களுக்குக் கொடுமைகள் புரியும் ஆண்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். "அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணைகளாகக் கருதுவோர் மற்றொரு திறத்தார். இரண்டும் பிழை"; (பாரதியார் கட்டுரைகள், பக்.129) என 'மாதர்' பகுதியில் 'தமிழ்நாட்டின் விழிப்பு' என்ற தலைப்பில் எழுதி உள்ளார். பெண்ணைப் பற்றிய ஆண்களின் பிழையான நோக்கினைச் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், அதே கட்டுரையின் வேறு ஓர் இடத்தில் "இன்று தமிழ்நாட்டில் மாத்திரமேயல்லாது பூ மண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம்" (பக். 130) எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், "விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்."
(பாரதியார் கட்டுரைகள், பக். 130).
விதவா விவாகம் செய்யத்தக்கது
இனி, பாரதியாரின் கதைகளில் இடம்பெற்றுள்ள பெண்ணியச் சிந்தனைகளைக் குறித்துக் காண்போம். அவரது 'சந்திரிகையின் கதை' இவ்வகையில் முதலில் குறிப்பிடத்தக்கது. இதில் வரும் விசாலாட்சிக்கு வயது இருபத்தைந்து. பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையான இளம்பெண் அவள். அவளது அண்ணன் மனைவியான கோமதி இறக்கும் தருவாயில் அவளிடம் கூறும் உருக்கமான சொற்கள் வருமாறு:
"விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ள வரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்குக் கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ள வரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச் 'சந்திரிகை' என்று பெயர் வை"
(பாரதியார் கதைகள், பக். 170)
கோமதி கூறிய இவ்வறிவுரைகளின் படி விசாலாட்சி தக்க ஆண்மகன் ஒருவனிடம் தன் வாழ்க்கையை ஒப்படைக்க விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறாள்; ஆனால், அம் முயற்சியின் போது, அவள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மிகமிகக் கசப்பானவையாகவே அமைகின்றன. இதோ, கதையின் பிற்பகுதியில் பாரதியாரே விசாலாட்சியின் அனுபவங்களைக் குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்:
"அவரிடம் (தாயுடன் பிறந்த மாமன்) பணத்தை வாங்கிக்கொண்டு விசாலாட்சி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபகரித்துக் கொள்ளவும், அல்லது அவ்விரண்டு வகை பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண் மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக (சாத்திர நெறிக்கு ஏற்றாற்போல) விவாகம் செய்து கொண்டு அவளுடன் சதிபதியாக (கணவன் மனைவியாக) வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை"
(பாரதியார் கதைகள், பக். 222).
'சந்திரிகையின் கதை'யில் இடம்பெறும் மேற்குறித்த இரு பகுதிகளின் வாயிலாகப் புலனாகும் பாரதியாரின் உள்ளக் கருத்துகள் இரண்டு. அவை வருமாறு:
1. பாரதியாருக்குக் கைம்பெண் மறுமணத்தில் - (விதவா விவாகத்தில்) உடன்பாடு உள்ளது. 'சந்திரிகையின் கதை'யில், 'விதவா விவாகம் செய்யத்தக்கது' என வரும் கோமதியின் கூற்றின் வாயிலாக இதனை உணர முடிகின்றது.
2. பெண்களுக்கு எதிராகச் சுயநல உணர்வோடு ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் கருத்துகளையும் ('நீசத்தனமான சுயநல சாஸ்திரம்') பெண்களின் கற்பைச் சூறையாட நினைத்து ஆண்கள் செய்யும் பலவிதமான கொடுஞ் செயல்களையும் எண்ணும்போது பாரதியாரின் உள்ளத்தில் ஆத்திரமும் கோபமும் பொங்கி எழுகின்றன.
6.5.1 பெண் விடுதலைக்காகச் செய்ய வேண்டுவன
தமது கட்டுரைகளில் பாரதியார் பெண்களுக்கு விடுதலை கொடுக்கும் வகையில் செய்யத்தக்கன எவை, செய்யத்தகாதன எவை என்பவற்றை அக்காலச் சூழ்நிலையின் அடிப்படையில் விவரித்துள்ளார். விருப்பமில்லாத விவாகம், குழந்தைத் திருமணம் இவை கூடாது என்கிறார். விவாகத்திற்குப்பின் விரும்பினால் கணவனைவிட்டு விலகவும் அல்லது விவாகமே செய்யாமல், சுயமாகத் தொழில் செய்து கௌரவமாக வாழவும் பெண்களுக்கு உரிமை தர வேண்டும் என்கிறார். கணவனைத் தவிர வேறு ஆடவருடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையை ஒழிக்க வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் தந்தையர் வழிச்சொத்தில் சமபங்கும், உயர்கல்வி பயிலும் உரிமையும், அரசு அலுவலகப் பணிகளை ஏற்கும் உரிமையும் கொடுக்க வேண்டும்
Answer:
സ്ത്രീകളുടെ രാഷ്ട്രീയവും സാമൂഹികവും സാമ്പത്തികവുമായ വിമോചനം ഭാരതീയർക്ക് മറ്റൊരു ആശങ്കയായിരുന്നു. "പെൺ വിത്മുക്തി" എന്ന വിഷയത്തിൽ അദ്ദേഹം മൂന്ന് ലേഖന പരമ്പരകൾ പ്രസിദ്ധീകരിക്കുകയും "പെൺ വിത്മുക്തി", "പെൺ വിത്മുക്തി കുമ്മി" എന്നീ കവിതകളിൽ പാടുകയും ചെയ്തു.
Explanation:
ഒരു പുരുഷനെ സംബന്ധിച്ചിടത്തോളം ഒരു സ്ത്രീ ഏകതാനമല്ല.
ശുദ്ധി എന്നത് സ്ത്രീയും പുരുഷനും ഒരുപോലെ പങ്കുവെക്കുന്ന പുണ്യമാണെന്ന് ഭാരതിയാർ തന്റെ രചനകളിൽ പ്രഖ്യാപിച്ചു. തന്റെ ലേഖനങ്ങളിലും കഥകളിലും സ്ത്രീകൾക്കെതിരെ പുരുഷന്മാർ ചെയ്യുന്ന വ്യത്യസ്ത കുറ്റകൃത്യങ്ങളെക്കുറിച്ച് അദ്ദേഹം വിപുലമായി എഴുതിയിട്ടുണ്ട്. പുരുഷന്മാർ സ്ത്രീകളോട് മോശമായി പെരുമാറുന്നതിനെ അദ്ദേഹം അപലപിച്ചിട്ടുണ്ട്. "കന്നുകാലികളെപ്പോലെ പെരുമാറുന്നവർ ഒന്ന് തുറന്നിരിക്കുന്നു. അവയെ പരുത്തി തലയിണകളായി കാണുന്നവർക്കായി അവർ മറ്റൊരു വാതിൽ തുറന്നിരിക്കുന്നു. രണ്ടും തെറ്റാണ്, "തമിഴ്നാടിന്റെ ഉണർവ്" എന്ന തലക്കെട്ടിൽ "മതർ" (ഭാരതിയാർ ഉപന്യാസങ്ങൾ) പറയുന്നത് പോലെ , പേജ് 129).പുരുഷന്മാർ സ്ത്രീകളോട് എങ്ങനെ പെരുമാറണമെന്ന് അദ്ദേഹം ഊന്നിപ്പറഞ്ഞു. കൂടാതെ, അതേ ലേഖനത്തിലെ മറ്റൊരു വിഭാഗത്തിൽ അദ്ദേഹം പ്രസ്താവിച്ചു: "ഇന്ന് തമിഴ്നാട്ടിൽ, മുഴുവൻ പുഷ്പരാജ്യത്തിലും, സ്ത്രീകളെ താഴ്ന്നവരായും പുരുഷന്മാരെ ഉയർന്നവരായും പരിഗണിക്കുന്ന സമ്പ്രദായം പൂർണ്ണമായും തെറ്റാണ്; ഇത് എല്ലാ കഷ്ടപ്പാടുകളുടെയും മൂലകാരണമാണ്; എല്ലാ അനീതികളുടെയും കോട്ട; കലിയുഗത്തിന്റെ കളിത്തൊട്ടിൽ" (പേജ് 130). അദ്ദേഹത്തിന്റെ അഭിപ്രായത്തിൽ, "വിവാഹിതനായ പുരുഷന് സ്ത്രീ അടിമയല്ല; ജീവന്റെ താങ്ങ്; ജീവന്റെ ഊന്നുവടി; ജീവിതത്തിന്റെ ഭാഗം; ശിവനെയും പാർവതിയെയും പോലെ; വിഷ്ണുവും ലക്ഷ്മിയും."
Learn more about it
brainly.in/question/17192176
brainly.in/question/11374064
#SPJ2