Political Science, asked by ravivdl90, 1 month ago

புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை?அவை யாவை?​

Answers

Answered by Brainlypieoker
25

Answer:

வாழ்க்கை நிகழ்வுகளைத் தமிழ் இலக்கண நூல்கள் அகம், புறம் என இரண்டு பொருள்களாகப் பகுத்துக்கொண்டுள்ளன.

அவற்றில் புறப்பொருளைத் தொல்காப்பியம் ஏழு திணைகளாகப் பகுத்துக் காட்டுகிறது. இது இலக்கியத்தில் கண்ட பாகுபாடு.

புறநானூற்றுப் பாடல்கள் அவற்றிற்கு இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

புறநானூற்றுப் பாடல்களுக்குப் பின்னர் தோன்றிய இலக்கண நூல்கள் புறப்பொருளுக்கு இலக்கணம் வகுக்கும்போது தம் விருப்பப்படி திணைகளையும், துறைகளையும் வகுத்துக் காட்டித் தம் பாகுபாடுகளுக்கு இலக்கியச் சான்றுகள் இல்லாமையால் இலக்கியச் சான்றுகளாகச் சில பாடல்களைத் தாமே பாடி இணைத்துள்ளனர்.

புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தவர் ஒவ்வொரு பாடலையும் அது தோன்றிய சூழலை எண்ணிப் பார்த்து அது இன்ன திணையைச் சேர்ந்தது என்னும், இன்ன துறையைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தொல்காப்பியம் புறத்திணையை 7 திணைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது. புறநானூற்றில் 11 திணைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணையைப் 12 திணைகளாகப் பகுத்துக் காட்டுகிறது.

கைக்கிளை, பெருந்திணைப் பாடல்களைத் தொல்காப்பியம் அகத்திணையில் கொண்டுள்ளது. புறநானூற்றில் அவை சேர்க்கப்பட்டுள்ளன. தொதுவியல் என்னும் திணை புறநானூற்றில் உள்ளது.

இது தொல்காப்பியத்தில் இல்லை. புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ளது. எனினும் இயன்மொழி என்னும் துறைக்குப் புறப்பொருள் வெண்பாமாலை தரும் இலக்கணம் புறநானூற்றுப் பகுப்புக்கு முழுமையாகப் பொருந்திவரவில்லை.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் புறனூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள திணை, துறை பாகுபாடுகள் தொல்காப்பியத்துக்கும், புறப்பொருள் வெண்பாமாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி வழக்கில் இருந்த பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூலைப் பின்பற்றியிருப்பது தெளிவாகிறது.

Answered by abarnaavijay
0

Answer:

புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் பதினொன்று ஆகும். அவை ,

1 ) வெட்சி

2 ) கரந்தை

3 ) வஞ்சி

4 ) காஞ்சி

5 ) நொச்சி

6 ) தும்பை

7 ) வாகை

8 ) பாடாண்

9 ) பொதுவியல்

10 ) கைக்கிளை

11 ) பெருந்திணை

திணை :

பொதுவாக திணை என்றால் ஒழுக்கம் என்பது பொருளாகும். இத்திணை, பாகுபாடு முறையில் இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை,

  1. அகத்திணை (வாழ்வியல்)

        அகத்திணை 7 வகைப்படும். அவை,

              1.குறிஞ்சி

              2. முல்லை

              3. மருதம்

              4. நெய்தல்

              5. பாலை

              6. கைக்கிளை

              7. பெருந்திணை

       2. புறத்திணை(உலகவியல்)

         புறத்திணை 12 வகைப்படும். அவை,

               1. வெட்சி

               2. கரந்தை

               3. வஞ்சி

               4. காஞ்சி

               5. நொச்சி

               6. உழிஞை

               7. தும்பை

               8. வாகை

               9. பாடாண்  

               10. பொதுவியல்

               11. கைக்கிளை

               12. பெருந்திணை

இந்த புறத்திணை வகைகளில் புறனாநூறு 11 புறத்திணைகளை குறிப்பிடுகிறது.

#SPJ3

Similar questions