Math, asked by saravanansiva913, 6 hours ago

வட்டாரமொழி எனப்படுவது யாது?​

Answers

Answered by caswin216
6

Answer:

பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.

மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும்.

இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

Answered by ragzep0
2

Answer:

வட்டாரமொழி வழக்குகள் என்பது ஒரு பொது மொழியிலிருந்து வேறுபட்டு ஒரு வட்டாரத்தில் அல்லது புவியியல் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் பேசப்படும் வழக்குகள் எனலாம். வட்டாரமொழி வழக்குகள் அந்தப் பொது மொழியின் ஒரு பகுதியே தவிர வேறு ஒரு மொழியாக கருதப்படுவதில்லை. பொதுவாக பல்வேறு வட்டாரமொழிகளைக் கொண்டுள்ள ஒரு மொழியினர் பேச்சிலும் எழுத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். பொது மொழிக்கும் வட்டார மொழிக்கும் வேறுபாடுகள் மிகும் இடத்து ஒரு வட்டார மொழி ஒரு தனி மொழியாக மருவும். தமிழிலிருந்து மலையாளம் இப்படி மருவிய மொழியாகும்.

இந்த வரையறை பொதுவானது அன்று. சீனாவில் வட்டார மொழிகளாகக் கருதப்படுவை சில பேச்சு வழக்கில் ஒன்றுக்கொன்றை புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், சீன எழுத்து முறையால் ஒன்றுபட்டவை.

Similar questions