India Languages, asked by StarTbia, 1 year ago

ஞாலம் - பெயர்க்காரணம் கூறுக.
குறுவினாக்கள்
தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Answers

Answered by Anonymous
0
gnal endral ulagu enbathu porul
Answered by gayathrikrish80
0

விடை:



ஞால் என்னும் சொல்லடியாய்த் தோன்றியது ‘ஞாலம்’ என்னும் தமிழ்ச்சொல். ஞால் என்பதற்குத் தொங்குதல் என்பது பொருள். உலகம் எவ்வித பற்றுக்கோடும் இன்றி அண்ட வெளியில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஞாலம் (உலகம்) எனப் பெயர் பெற்றது.



விளக்கம்:



இவ்வுலகம் பேரண்டத்தின் கோள் என்பதையும் இவ்வண்டப் பரப்பையும் அதன்மீது அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாய்ப் பேசுகின்றன. விண்ணியல் பற்றி ‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ திருவாசகம் கூறுகிறது. இத் திருவாசகத்தின் வரிகள் பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதை ஆழமாக உணர்த்துகிறது.



ஞாலம் என்னும் தமிழ்ச்சொல் ஞால் என்னும் சொல்லடியாய்த் தோன்றிய என்பர். ஞால் என்பதற்கு தொங்குதல் என்பது பொருள். எவ்விதப் பற்றுதலுமின்றி அண்ட வெளியில் உலகம் தொங்கிக் கொண்டிருப்பதனை இஃது உணர்த்துகிறது.


Similar questions