India Languages, asked by charinicharini346, 7 hours ago

வையகம் பனிப்ப எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை எழுதுக?​

Answers

Answered by patilchaitanya924
0

Answer:

வையகம் பனிப்ப எனத் தொடங்கும்

Answered by hotelcalifornia
2

Answer:

நெடுநல்வாடை

Explanation:

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்

நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க*

-நக்கீரர்  

பாவகை – நேரிசை ஆசிரியப்பா

  • நெடுநல்வாடை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள்  ஒன்று ஆகும்.
  • கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும்
  • சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.

Similar questions