India Languages, asked by mohansuthish20, 1 day ago

பாவலரேறு பெருஞ்சித்திரனார் படைப்புகளை எழுதுக​

Answers

Answered by sreemathibalakrishna
0

Explanation:

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.

Answered by ar5046316
0

Answer:

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் இளமைக் காலத்திலேயே தமிழரின் மொழி, இன, நாட்டு நலக்கொள்கையைப் பின்பற்றிச் செயற்படத் தொடங்கினார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் மாணவராக இருந்து தமிழில் புலமை கைவரப்பெற்று பாவாணரைத் தமிழுலகம், மொழியியல் உலகிற்கு உயர்த்திக் காட்டியதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. ‘தென்மொழி’ என்ற தனித்தமிழ் இதழ் ஒன்றை நடத்தி, தனித்தமிழ்க்கொள்கை தொடரவும் வெற்றிபெறவும் செய்தார். அதனால் உலகமுழுவதும் தன்னறிமுகமும் பாராட்டுதலும் கிடைத்தது.

தம் வாழ்நாள் முழுவதும் உணர்வான பாடல்களை எழுதி தமிழினத்திற்கு தன்னுணர்வு, விழிப்புணர்வு ஊட்டியவர். தமிழனுக்கு ஒரு சொந்த நாடு கிடைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். தனித்தமிழ் நாட்டுக் கொள்கையுடையவர். வாழ்க்கை முழுவதும் தாம் கொண்ட கொள்கைக்காகச் சொற்பொழிவு, இதழ்ப்பணி, போராட்டம் எனப் பலமுறைகளில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றுள்ளார். அவர்தம் வாழ்நாள் முழுவதுமான பாடல்கள் எட்டு தொகுதிகளாகக் தொகுக்கப்பட்டு, அவரின் 80ஆம் ஆண்டில் வெளிவருகிறது. இவரது படைப்புகள் அனைத்தும், நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அவற்றில் இக்கனிச்சாறும் ஒன்றாகும்.

Similar questions