India Languages, asked by saisakthiservicecbe, 8 hours ago

அகீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி. ஒரு குறிக்கோளைச் சுவைபடச் சொல்வது இலக்கியம். ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு குறிக்கோளை வலியுறுத்துகிறது. இலக்கியம் வாழ்வின் கண்ணாடி வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. இலக்கியம் என்பது வெறும் சொற்களால் ஆன சொல்லோவியம் அன்று வாழ்வின் உண்மைகளை விளக்கித் தந்து மக்களுக்கு கலங்கரை விளக்கம் போன்று வழிகாட்டுவதாகும். அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே என்று நன்னுலார் கூறுகின்றார். கம்பராமாயணமும், வில்லிபாரதமும் சிறந்த இலக்கியங்களாகும். சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும். பத்தினிப் பெண்களை உலகம் புகழும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற மூன்று குறிக்கோள்களை இயம்புகிறது. இராமாயணம் தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை: தத்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. என்பதை எடுத்துக்காட்டுகிறது. வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த ஒரே மொழி தமிழ்மொழி ஆகும். விளக்கள் ! 1. சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் யாவை? 2. வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த ஒரே மொழி எது? 3. நூற்பயன் யாது? 4. இராமாயணம் உணர்த்தும் கருத்துகள் யாவை? 5. இலக்கியங்களின் நோக்கம் யாது?​

Answers

Answered by drshanmugapriyar
0

Answer:

1.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

2.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த ஒரே மொழி தமிழ்மொழி ஆகும்.

3. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயன் ஆகும் .

4.  இராமாயணம் தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை: தத்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. என்பதை எடுத்துக்காட்டுகிறது.

5.சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான,அறத்தை எடுத்துக் காட்டுவது,இலக்கியம். சிறந்த மொழிக் குறிக்கோளான, அமைப்பை எடுத்துக் கூறுவது, இலக்கணம்.

Explanation:

Please mark me as a brainlist

Similar questions