கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒரு உரையைத் தயாரிக்கவும் : சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
Answers
Answer:
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழ்மொழியின் சொல்வளம் கால மாற்றத்தால் எவ்வாறு சீர்குலைந்துள்ளது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் இக்கவிதையின் வாயிலாக விளக்குகின்றார். இனிமையும் சொல்வளமும் நிறைந்தது தமிழ்மொழி என்பதை உணர்த்திடவே பாரதி “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்று பாடினான்.தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்க பாரதி போன்று இன்றைய இளைய தலைமுறை முயல்வதில்லை என்று வருந்துகின்றார்.
உலகப்பொதுமறை தந்த வள்ளுவனுக்குச் சிலை வைப்பதும், மாலையிட்டு வணங்குவதும் அவருக்குச் செய்யும் மரியாதை அல்ல. வள்ளுவன் இயற்றிய திருக்குறளின் அருமை அறிந்து அதனைப் படித்து, அதன்படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்களை வணங்குவதுதான் உண்மையில் வள்ளுவனுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என்று உணர்த்துகின்றார். ஆகவேதான் “திருவள்ளுவர்க்குக் கூட என்வணக்கம் இல்லை, திருக்குறளைப் படிப்பவர்க்கெல்லாம் என்வணக்கம்” என்றுரைக்கின்றார்