கெடுப்பார் இலானுங் கெடுப்பவர் யார்?
குறுவினாக்கள்
திருக்குறள்
Answers
Answered by
10
விடை:
கடிந்து அறிவுரை கூறும் பெரியோரைத் தமக்குத் துணையாய்க் கொள்ளாத மன்னன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இன்றியும் தானே கெட்டழிவான்.
விளக்கம்:
பெரியாரைத் துணையாய்க் கொள்ளாதவன், பகைவராய் இருந்து கேடு செய்வார் எவரும் இலர் எனினும், தானே தீய வழிகளில் சென்று அழிவான். முதலீடு இல்லாத வணிகருக்கு இலாபம் இல்லை. அதுபோல, தம்மைத் தாங்கும் பெரியார் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
தக்க சமயத்தில் உறுதி கூறும் பெரியார் தொடர்பு இல்லாதவன் பலரை பகைத்துக் கொள்வதைவிட பன்மடங்கு பெருந்தீங்கு அடைவான் என பெரியாரைத் துணையாய்க் கொள்ளாதவனின் தீமையை திருக்குறள் விளக்குகிறது.
Answered by
1
Answer:
இடிபபாரை இல்லாத
ஏமரா மன்னன்
கொடுப்பார் இலானும் கெடும்
Similar questions