பின்வரும் பாடலைப் படித்து அவற்றில் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபுத் தொடைகளின் நயங்களை விளக்குக. சிந்தித்தேன்! சிந்தித்தேன்! உலக மக்கள் சிந்தையிலே ஒளியில்லை! பலரை இங்கே சந்திக்கும் போதெல்லாம் இருட்டுக் குள்ளே தலைகுனிந்து நிற்பதிலே மகிழ்ச்சி என்பார்! முந்துகின்ற உணர்வுகளும் குன்றி, நம்பி முன்நடக்க வழிகாட்டி எவரும் இன்றி சந்தியிலே நிற்கின்றார்! ஊக்கம் ஊட்டி சரியாக வழிநடத்தல் கடமை என்பேன்!
Answers
Answered by
0
எதுகைத் தொடை : இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
மோனைத்தொடை : முதல் எழுத்து ஒன்றி வருவது ஓர் எழுத்துக்கு மோனையாக அதன் இன எழுத்தும் வரலாம்.
இயைபு : சீர் இயைபுத் தொடை வகைகள் காணும்பொழுது
அளவடியில் இறுதிச்சீரே முதற்சீராகக் கொண்டு வழங்கப்படும்
Explanation:
எதுகை
செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல வருவது எதுகை.
சிந்தித்தேன் - சந்திக்கும்
முந்துகின்ற - சந்தியிலே
சிந்தித்தேன் - சிந்தையிலே
மோனை
செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல வருவது மோனை.
சிந்தித்தேன் - சிந்தையிலே
முந்துகின்ற - முன்நடக்க
சந்தியிலே - சரியாக.
இயைபு
செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் இறுதி எழுத்தோ சொல்லோ ஒன்றுபோல வருவது இயைபு.
குன்றி - இன்றி
வழிகாட்டி - ஊட்டி.
Similar questions