கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி கட்டுரை எழுதவேண்டும்
Answers
Answer:
புதிய கட்டுரை
அதிகமாக பார்த்தவை
தேர்வு செய்யப்பட்டவை
கட்டுரை பிரிவுகள்
மதுவினால் ஏற்படும் தீமைகள்
தமிழகம் இன்று போதையால் தத்தளிக்கிறது. இங்குள்ள மக்களில் பலர் மது இல்லாத நாளே இல்லாமல்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் உடலில் உரம் இருக்கும் வரைதான் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. உடலில் பலம் குறைய குறைய மதுவின் பாதிப்புகள் அதிகமாகி விடும்.
வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் ,நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் கேள்விகள். ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள்.