மனிதனின் முதல் இருப்பிடமான காடுகள் பற்றியும் அங்கு வாழும் விலங்குகள் பற்றியும் தொகுத்து எழுதுக
Answers
Answer:
காட்டுயிர் (wildlife) என்பது வீட்டைச் சாராத அனைத்து தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மனிதனின் நன்மைக்காகக் காட்டுத் தாவரம் மற்றும் விலங்கினங்களை வீட்டுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் உலகம் முழுவதும் பலமுறை நடந்துள்ளது. இது சுற்றுப்புறத்திற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.காட்டுயிர்களை அனைத்து சூழ்நிலை மண்டலங்களிலும் காணலாம். பாலைவனங்கள், மழைக்காடுகள், சமவெளிகள் போன்ற இடங்களில் மட்டுமன்றி மிகவும் வளர்ச்சியுற்ற நகர்ப்புறங்களில் கூடத் தனித்துவமான காட்டுயிர் வடிவங்கள் காணப்படுகின்றன. பொதுப் பயன்பாட்டில் இந்த வார்த்தை மனிதக் காரணிகளால் பாதிக்கப்படாத விலங்குகளைக் குறிப்பிட்ட போதும்,[1] பெரும்பாலான அறிவியலாளர்கள் உலகம் முழுவதும் காட்டுயிர்கள் மனித நடவடிக்கைகளால் தாக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.
வரலாற்று ரீதியாக, சட்டம், சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த உணர்வு உள்ளிட்ட பல வழிகளில் நாகரிகத்தை காட்டுயிர்களில் இருந்து மனிதர்கள் பிரித்திருக்கின்றனர். இவை பதிவு செய்யப்பட்ட வரலாறு முழுவதிலும் விவாதத்திற்கான காரணமாகின. சமயங்கள் பொதுவாக சில விலங்குகளைப் புனிதத்தன்மை உடையவையாக தெரிவித்துள்ளன. தற்காலத்தில் இயற்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள அக்கறை, மனித நன்மைக்காக அல்லது பொழுதுபோக்குக்காக காட்டுயிர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்வலர்களால் மேற்கொள்ளுவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. இலக்கியமும் காட்டுயிர்களில் இருந்து பண்டைய மனிதனைப் பிரிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது.
Explanation:
Plz mark me as BRAINLIEST