குறிப்புகளைப்பயன்படுத்தி கதை எழுதுக:
அமைதி-வனம் - மனத்தைத் தொட்டது - கொஞ்சம் அச்சம் - ஆனால் பிடித்திருந்தது- இரவில் வீட்டின் அமைதியை விட - வனத்தின் அமைதி - புதமை - கால்கள் தரையில் - இலைகளின் சலசலப்பு - பறவைகள் மரங்களின் மேல் - சிறகடிப்பு - அருகில் திரும்பியவுடன் - திடீரென ஆரவார ஓசை - தண்ணீரின் ஓட்டம் - அழகான ஆறு - உருண்டை - சிறு கூழாங்கற்கள் இயற்கையின் கண்காட்சி
Answers
Answer:
அமைதியான வனம் :
அடர்ந்த மரங்களைக் கொண்ட பசுமை மிகுந்த அமைதி நிறைந்த வனத்திற்குச் சென்றேன். வனத்தாவரங்கள் மற்றும் மலர்களின் நறுமணம் என் மனதைத் தொட்டது. அச்சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. இரவில் வீட்டில் இருக்கும் அமைதியைவிட வனத்தின் அமைதி என்னை மிகவும் கவர்ந்த து.
காட்டுயிரிகள் :
புதுமையான ஓர் அனுபவத்தைப் பெற்றேன். என் கால்கள் தரையில் ஊன்றியிருப்பதாய்த் தெரியவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டு ஓசை வந்த திசை நோக்கித் திரும்பினேன். மரங்களின் மேலிருந்த பறவைகள் தங்கள் சிறகுகளை அடித்து சோம்பலைப் போக்கிக் கொண்டிருந்தன
ஆரவார ஓசை :
திடீரென ஏற்பட்ட ஆரவார ஓசையைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன். குரங்குகள் தண்ணீரின் ஓட்டத்தில் தங்கள் முகங்களின் அழகைக் கண்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தன.
அழகான ஆறு :
தெளிவான நீரோடையின் உள்ளே, உருண்டை வடிவில் சிறு கூழாங்கற்கள் பார்ப்பதற்கு விலையுயர்ந்த கற்களைப் போலவும், கண்ணாடியால் செய்யப்பட்ட உருண்டைகள் போலவும் தோற்றமளித்தன. இத்தகைய இயற்கையின் கண்காட்சி என் மனதை விட்டு அகலவில்லை.