India Languages, asked by sonaarkana, 12 days ago

குழந்தைகள் தினம் பற்றி கட்டுரை....விரிவாக எழுதுக? ​

Answers

Answered by KanishkaC
2

Answer:

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும், குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டியை அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தன் குழந்தையைத் தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்தியதையே நேருவின் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தைகள் தினம் குறித்த சில சுவாரஸ்யமான விசயங்களை தெரிந்துகொள்வோம் வாங்க.

சட்டென இலகிவிடும் மனம் படைத்தோரை குழந்தை மனம் கொண்டவன் என்றுதான் நாம் அனைவருமே கூறுவோம். கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான்.

1889 நவம்பர் 14-ந் தேதியன்று அலகாபாத்தில் பிறந்தவர் ஜவகர்லால் நேரு. பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள், இளைஞர்களின் நல்ல உடல்நிலை, கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். தொடர் பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார் நம் நேரு.

Explanation:

I am also tamil

mark me as brainliest

Similar questions