காந்தியடிகளைக் கவர்ந்த குஜராத் பாடலின் கருத்து யாது?
குறுவினாக்கள்
காந்தியம்
Answers
Answered by
0
விடை:
காந்தியடிகளைக் கவர்ந்த குஜராத்திப் பாடலின் கருத்து, தாகத்திற்கு நீர் தருவதனால் பயன் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்; அதில் உண்மைப் பொருண்மை உண்டு என்பதாகும்.
விளக்கம்:
காந்தியடிகள் சிறுவராய் இருந்தபோது கேட்ட ‘தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு’ என்ற குஜராத்தி பாடல் இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தை அவருள் விதைத்தது.
மேலும் உண்மை பேசுதல், பகைவனிடம் அன்பு பாராட்டுதல், நோக்கமும் அவற்றை அடையும் வழிகளும் தூய்மை ஆனவையாய்ப் பிறருக்குத் துன்பம் தராதனவாய் இருத்தல், எளிமையாய் இருத்தல் ஆகியவற்றை அறநெறிகளாய்ப் போற்ற வேண்டும் என்று காந்தியடிகள் கூறினார்.
Similar questions