India Languages, asked by monishamar640, 17 days ago

காட்சி  :
அ) வினையாலணையும் பெயர்
ஆ) தொழிற்பெயர்
இ) வினைத்தொகை
ஈ) எதிர் மறை தொழிற்பெயர்​

Answers

Answered by zumba12
1

வினையாலணையும் பெயர்

வினைமுற்றுகள் பெயராக மாறி நின்று மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முற்றுப்பெறுவது வினையாலணையும் பெயர் எனப்படும்.

சான்று : பாடினாள்

வினைத்தொகை

வினைத்தொகை  என்பது மூன்று கால வினைகளையும், தெரிநிலை பெயரெச்ச விகுதிகளையும் மறைத்து ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல்.

சான்று :   ஊறுகாய்

எதிர் மறை தொழிற்பெயர்

வினையடி + எதிர்மறை இடைநிலை + அது, மை அமைப்புடைய எதிர்மறை தொழிற் பெயர்கள் எதிர்மறை  இடைநிலைகள் அது, மை போன்ற தொழிற்பெயர் விகுதிகளுடன் சேர்ந்து எதிர்மறை தொழிற்பெயர்களாக செயற்படும்.

சான்று :  செய்யாதது

தொழிற்பெயர்

  • வினையடியாகப் பிறந்து வினையின் நிகழ்வினை அல்லது வினை நிகழாமையை உணர்த்தும் பெயர்கள் தொழிற்பெயர்கள் எனப்படும்.
  • ஒரு வினையை ( தொழில்) குறிக்கின்ற பெயர் தொழிற்பெயர் எனப்படும்.

சான்று : பாடுதல் , காட்சி

  • காட்சி என்னும் தொழிற்பெயர் -  காண்+சி எனப் பிரியும்.

விடை: காட்சி - தொழிற்பெயர்

Answered by vvsbss1752
0

Answer:

ஆ) தொழிற்பெயர்

Explanation:

Because an action is depicted

Similar questions