சிற்றிலக்கியம் பிரித்து காண்பிக்க
சிறிய + இலக்கியம்
சிறு + இலக்கியம்
சிறி + இலக்கியம்
சிறுமை + இலக்கியம்
Answers
Answer:
சிறுமை + இலக்கியம்
Explanation:
பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள்,நன்கு கட்டப்பட்ட
இலக்கிய வடிவம் என்பதாக அமைகிறது.
பிரபந்தம் எனும் வடமொழிச் சொல்லைத் தமிழில் திரட்டு,
தொகுப்பு எனும் பொருளிலேயே முதலில் பயன்படுத்தினர்.
பன்னிரண்டு ஆழ்வார்கள் தந்த நாலாயிரம் பாசுரங்களை
நாலாயிரம் அழகான (இனிமையான) பாடல்களின் தொகுப்பு எனும் பொருளிலேயே நாதமுனிகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்எனப் பெயர் சூட்டினார்.
ஆக, பிரபந்தம் எனும் சொல் தமிழில் ஒரே நேரத்தில்
இலக்கியம் எனவும், தொகை எனவும் வழங்கப்பட்டதை அறியமுடிகிறது.
தமிழில் அமைந்த பாட்டியல் நூல்களும் பிரபந்தத்தை இலக்கியம் எனும் பொருளிலேயே வழங்கியுள்ளன. தூது, உலா, கலம்பகம் உள்ளிட்ட சிறிய இலக்கியங்களை முற்காலத்தோர் சில்லறைப் பிரபந்தம் என்று வழங்கினர். “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தனித்தமிழ் இயக்கம் எழுந்தபோது சில்லறைப் பிரபந்தம் எனும் பெயருக்குப் பதிலாகத் தனித் தமிழ்ச் சொல்லான சிற்றிலக்கியம் எனும் பெயர் வழக்கிற்கு வந்தது”என்று சிற்றிலக்கிய ஆராய்ச்சி எனும் நூலில் டாக்டர் இரா.கண்ணன் குறிப்பிடுகிறார்.
சிற்றிலக்கியம் = சிறுமை + இலக்கியம்
சிறுமை - அளவால், உருவத்தால், பண்பால் குறுகியது, சிறியது என்னும் தன்மை.
இலக்கியம் - இன்பியல்
For more related question : https://brainly.in/question/14830575
#SPJ1