World Languages, asked by subanyasiva259, 2 days ago

எங்கள் தாய் கவிதையின் பாரதியார் கூறுவனாற்றை தொகுத்து எழுதுக​

Answers

Answered by badguy6161
3

Answer:

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும் - இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பினாளாம் எங்கள் தாய்

யாரும் வகுத்தற்கு அரியபி ராயத்தன்

ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்

பாருள்இந் நாளுமோர் கன்னிகை என்னப்

பயின்றிடு வாள்எங்கள் தாய்

முப்பது கோடி முகமுடை யாள்உயிர்

மொய்ம்புற வொன்றுடை யாள் - இவள்

செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்

நாவினில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடை யாள் - தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடை யாள்

அறுபது கோடி தடக்கைக ளாலும்

அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்

செறுவது நாடி வருபவ ரைத்துகள்

செய்து கிடத்துவள் தாய்

பூமியி னும்பொறை மிக்குடை யாள் உருப்

புண்ணிய மாம்எங்கள் தாய் - எனில்

தோமிழைப் பார்முன் நின்றிடுங் கால் கொடுந்

துர்க்கையு மாம்எங்கள் தாய்

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்

கை தொழு வாள்எங்கள் தாய் - கையில்

ஒற்றைத் திகிரிகொண் டுஏழுல காளும்

ஒருவனை யும்தொழு வாள்

போகத்தி லேநிகர் அற்றவள் உண்மையும்

ஒன்றென நன்றறி வாள் - உயர்

போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்

பொற்குவை தானுடை யாள்

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நலம்புரி வாள்எங்கள் தாய் - அவர்

அல்லவ ராயின் அவரை விழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்திடு வாள்

வெண்மை வளர்இம யாசலன் தந்த

விறல்மக ளாம்எங்கள் தாய் - அவன்

திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தம்

சீருறு வாள்எங்கள் தாய்

Answered by ChitranjanMahajan
7

எங்கள் தாய் கவிதையில் பாரதியார் கூறுவன:

  • முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணரும் பல கல்வி கற்றவர்களும் இவள் எப்போது தோன்றியவள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவள் எங்கள் தமிழ் தாய்.
  • எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரியாக வகுத்துச் சொல்ல முடியாத அளவு வயதினை உடைய எங்கள் தாய், இந்த உலகில் எப்போதும் ஒரு கன்னிகை போல் இருப்பவள் ஆவாள்.
  • முப்பது கோடி மக்களை உடையவள். ஆனாலும் உயிர் எல்லோரிடமும் சேர்ந்து ஒரே உயிராக வாழ்பவள்.
  • இவள் பேசுகின்ற மொழிகள் பதினெட்டாக இருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருக்கிறாள்.
  • இவள் நாவினில் வேதத்தையும் கையில் நன்மை விளங்கும் வாளினையும் கொண்டிருக்கிறாள்.
  • தன்னை அடைந்தவர்களுக்கு இன்னருள் செய்பவள். தீயவர்களை வீழ்த்திடும் வலிமையுடைய தோளினை உடையவள் எங்கள் தமிழ் தாய்.
  • அறுபது கோடி நீண்ட வலிமையான கைகளாலும் எல்லாவித அறங்களையும் நடத்துகிறவள் எங்கள் தாய்.
  • தன்னை அழிக்க விரும்பி யாராவது வந்தால் அவர்களை தூள் தூளாக்கி ஒழித்து விடும் சக்தி கொண்டவள் எங்கள் தாய்.
  • பூமியை விட பொறுமையில் சிறந்தவளும் பெரும் புண்ணியம் செய்யும் மனத்தை உடையவளும் அவளே.
  • ஆனாலும் தனக்குக் குற்றம் இழைப்பவர் முன் நிற்கும் கரிய கொடிய துர்க்கையைப் போன்றவள் எங்கள் தாய்.
  • சிவபெருமானையும் பெருமாளையும் தொழுவாள்.
  • யோகங்களிலே நிகரில்லாதவள் அவள். உண்மை என்பது இறை ஒன்று தான் என்பதை நன்கு அறிவாள். உயர்ந்த போகங்களிலேயும் நிறைவானவள். எண்ணிலடங்காத செல்வங்கள் உடையவள்.
  • நல்லறம் நாடிய மன்னர்களை வாழ்த்தி நல்லதைப் புரிவாள் . அவர்கள் கெட்டவர்கள் ஆயின் அவர்களை அழித்து அதன் பின் ஆனந்தக் கூத்திடுவாள்.
  • வெண்ணிறம் கொண்ட இமயமலை தந்த மகள் எங்கள் தாய்.
  • அந்த இமயத்தின் திண்மை குறைந்தாலும் தான் மறாத திண்மையுடையவள்.
  • தினமும் மேன்மேலும் சீர்களைப் பெறுவாள் எங்கள் தமிழ் தாய்.

#SPJ2

Similar questions