உன்னுடைய ஊரில் உற்பத்தியாகும் பொருள் மற்றும் தொழில் பற்றி எழுதி வரவும்
Answers
Answer:
தொழிலே ஒரு நாட்டின் உயிர்த்துடிப்பு. தொழிலில் சிறந்து விளங்கும் நாடு, பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கும். தாம் வாழ்ந்த திணைகளுக்கு பொருந்தியது போல் தமிழர்கள் பேண்தகு தொழில் செய்து சிறப்புற்றிருக்கிறார்கள். தற்காலம் உந்திய அறிவியல் தொழில்நுட்ப புரட்சிகர மாற்றங்களுடன் இயைந்து வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில்கள் தொடர்பான கட்டமைப்புளையும் செயற்பாடுகளையும் தமிழ்நாட்டு தொழிற்துறைகள் என்ற தலைப்பு குறிக்கின்றது. தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், வணிக நிறுவனங்கள், அரச அலகுகள், இயற்கை வளங்கள், தொழில்நுட்பம், சட்ட-வணிக சூழல் ஆகியவை தமிழ்நாட்டு தொழிற்துறையின் கூறுகள் ஆகும்.
தமிழ்நாட்டின் பல்வேறு தரவுகள் தொழிற்துறையின் வளர்ச்சியை சுட்டி நிற்கின்றன.
மொத்த தேசிய உற்பத்தி - 64 billion USD - இந்தியாவில் ஐந்தாவது நிலை [1].
தொழில்மயமாக்கம் - இந்தியாவில் இரண்டாவது நிலை .[2]
நகரமயமாதல் - 43.86 % - இந்தியாவில் முதலாவது நிலை .[3]
வெளிநாட்டு முதலீடு - 9.12% - இந்தியாவில் மூன்றாவது நிலை .[4]தமிழக அரசின் தொழில் கொள்கை, அதிக வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, சென்னையின் துறைமுக வசதி ஆகிய காரணங்களுக்காக சென்னையில் அதிக அளவில் வாகண உற்பத்தி தொழில்சாலைகள் உள்ளன. ஹுன்டாய்[கொரிய நிறுவனம்] வருடத்தில் 3,30,000 கார்களை(தானுந்து) சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து தயாரிக்கிறது. ஹுன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களை சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.[5].
மென்பொருள் அதிக அளவில் எற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று. 2011-2012 ஆம் ஆண்டு, மென்பொருள் எற்றுமதி $8.5 பில்லியன் என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்[6]. இந்தியாவில் மென்பொருள் எற்றுமதி செய்யும் நகரங்களில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.மென்பொருள் எற்றுமதி தமிழ்நாட்டில் 2008–09 ஆண்டு 29 விழுக்காடு உயர்ந்து, 280,000 மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, ரூபாய் 366.80 பில்லியன் என்று இருந்தது[7].
தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் நோக்கியா, மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து தயாரிக்கிறது.[8][9]. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது[10]. நோக்கியா வருடத்தில் தொராயமாக 25,00,000 கைபேசிகளை சென்னையில் இருந்து தயாரிக்கிறது
Explanation:
please mark me as brainlist