காரணத்தையும் எழுதுக.
சரியான விடையை எடுத்து எழுதுக
திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம்
(தை முதல் நாள் / சித்திரை முதல்
Answers
Answer:
பிரபவ ஆண்டு முறையில் தமிழ் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு அழிவும், இழிவும் உண்டானதை எண்ணிப் பார்த்து நுண்ணறிவுடையஅறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ம் ஆண்டு சென்னைரப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிஆராய்ந்தனர்.
திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் எனவும், அவர் பெயரில் தொடராண்டைப் பின்பற்றுவது சாலச் சிறந்தது என்றும்,அதையே தமிழாண்டு எனக் கொள்வது என்றும் முடிவுகட்டினர். இந்த முடிவை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டு பின்பற்றத் தொடங்கினர்.
மேற்கண்ட முடிவைச் செய்தவர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார். தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணிணியப்பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார்., நாவலர் சோம சுந்தர பாரதியார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவர்.
திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமை ஏழும் - வழக்கில் உள்ளவை.
திருவள்ளுவரின் காலம் கி.மு. 31. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2001+ 31 = 2032. இப்பொழுது திருவள்ளுவர் ஆண்டு2032 ஆகும்.
தைத் திங்களில் தான் உழவர்களின் விளை பொருள் களஞ்சியத்துக்கு வருகிறது. பொருளாதாரத் திட்டம் வகுக்கும் காலம் தை. கிராமத்தினர் - ஊர்ச்சொத்தை குத்தகைக்கு விடும் காலமும் தை திங்களே ஆகும்.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 முதல் ஏற்று 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர்ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.
எனவே உலகிலுள்ள 10 கோடித் தமிழ் மக்களும் தமிழர் மானம் காத்திட திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்ற வேண்டும். கடிதங்கள், அழைப்பிதழ்கள்ஆவணங்கள் ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டினையே பின்பற்ற வேண்டும்.
திருவள்ளுவர் தமிழ் மொழியில் குறளை எழுதியதாலும், தமிழரானதாலும் குறளையும் வள்ளுவரையும் ஏற்றுக் கொள்ளவும் பிற மொழியினர்தயங்குகின்றனர். ஆனால் அவருடைய பொதுமையை உணர வேண்டும். ஓரிடத்திலேனும், தமிழ் என்றோ, தமிழ் நாடு என்றோ,முவேந்தர் என்றோதிருக்குறளில் குறிப்பிடவில்லை.
அவர் கூறும் கருத்துக்கள் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பெற்றுள்ளதால் - திருக்குறள் உலகமறை என்று மதிக்கப் பெறும் உயரியநூலாகும்.
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தினாற் போல சிறிய குறட்பாக்களில் பெரிய செய்திகள் அடங்கி உள்ளன.
60 ஆண்டு முறை பயனற்றது. -60 ஆண்டு முறையை ஆரியர் தமக்குள்ள செல்வாக்கால் தமிழரசரிடம் புகுத்தினர்.
இப்போது வழங்கும் பிரபவ - அட்சய ஆகிய வருடங்கள் சாலி வாகனன் என்பவரால் (கனிஷ்கர்களால்) கி.பி. 78-ல் ஏற்பட்டவை.
60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதாலும் மிகக் குறுகியதினாலும் வரலாற்று நூலுக்குப் பயன்பட்டது. பிரபவ என்றால் எந்தப் பிரபவஎன்று கூற முடியாததால் இந்த கால அளவு இன்மை பற்றித் தமிழுக்கு ஒரு குறையும் இல்லை.
வழக்கில் உள்ள 60 ஆண்டு முறை சரியில்லை. இதைப் பின்பற்றுவது மானக்கேடு என அறிஞர்களும் - பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும், பேரறிஞர்அண்ணாவும் கூறியுள்ளனர். எனவே தமிழப் பெருமக்கள் தை முதல் நாளைத் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும் தை 2 ஆம் நாளைத் திருவள்ளுவர் நாளென்றும்கொண்டாடுவர்