கிளைசின் மற்றும் அமினோ காப்ரிக் அமிலத்திலிருந்து எது உயிரியல் சிதைவு பாலிமரை உருவாக்கும்?
Answers
Answer:
வேதியியலில், அமினோ அமிலம் அல்லது அமினோக் காடி (amino acid) என்பது, அமைன் (-NH2), கார்பாக்சைல் (-COOH) ஆகிய இரண்டு வேதி வினைக்குழுக்கள் கொண்ட ஒரு மூலக்கூறு ஆகும். அமினோ அமிலத்தில் காணப்படும் முதன்மையான தனிமங்களாக கார்பன் (கரிமம்), ஐதரசன், ஆக்சிசன், நைதரசன் போன்றவை காணப்படுகின்றன, பிற சில தனிமங்கள், ஒரு சில அமினோ அமிலங்களின் பக்கச்சங்கிலிகளில் காணப்படுகின்றன. மரபுக்குறியீட்டில் 20 அமினோ அமிலங்களுக்குரிய தகவலே காணப்பட்டாலும், ஏறத்தாள 500 அமினோ அமிலங்கள் அறியப்பட்டுள்ளன.[1] இவை பல்வேறு விதங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன, கட்டமைப்பின்படி இவற்றை வேதி வினைக்குழு இருப்பிடத்திற்கு ஏற்ப அல்பா- (α-), பீட்டா- (β-), காம்மா- (γ-) அல்லது டெல்டா- (δ-) அமினோ அமிலங்கள் என வகைப்படுத்தலாம். உயிர்வேதியியலில், இச் சொல் H2NCHRCOOH என்னும் பொது வாய்பாட்டைக் கொண்ட ஒரு ஆல்ஃபா-அமினோ அமிலத்தைக் குறிக்கும்[2]. இங்கே R ஒரு கரிம வேதிக்கூறு ஆகும். ஆல்ஃபா-அமினோ அமிலங்களில் அமினோ, கரிம ஆக்சைலேட்டு ஆகிய கூட்டங்கள் ஆல்ஃபா - கார்பன் (α–carbon) எனப்படும் ஒரே கரிம அணுவுடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்தப் பக்கச் சங்கிலி (R-கூட்டம்) ஆல்ஃபா-கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துப் பல்வேறு அமினோ அமிலங்கள் தங்களுக்குள் வேறுபடுகின்றன. இது, கிளைசினில் இருப்பது போல் ஒரு ஐதரசன் அணுவிலிருந்து, அலனைனில் உள்ள மெத்தைல் கூட்டம் (en:Methyl group) ஊடாக, டிரிப்டோபானில் காணப்படும் வேற்று வளையக் கூட்டம் வரை பல்வேறு அளவுகளில் உள்ளது