திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை தென்கரை நாட்டு பால் குடித்தால் வலி இயற்கை வளங்களை விவரிக்க
Answers
திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை நாட்டுவளம் :
வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள், ‘இந்தளம்’ என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். வண்டின் இசைகேட்டு வாய்க்காலில் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில், மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை, வாலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்.
தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும், முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும். மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும். இத்தன்மை கொண்ட திருமலையில், புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.
திருமலை முருகன் பள்ளு கூறும் தென்கரை நாட்டுவளம் :
தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில், மேகக் கூட்டங்கள் தங்கி செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகைகளில், அகில்புகையின் நறுமணம் பாடிக்கொண்டே இருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும். செங்கோலைக் கொண்ட மன்னர், தென்கரை நாட்டை நீதி தவறாமல் காவல் காப்பர். இளைய பெண்கள், பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர்.
இங்குள்ள குளங்களின் அலைகள், முத்துகளை ஏந்தி வரும்; பலவலைகள், கரைகளில் மோதும்பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும். இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றைமலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் வீற்றிருக்கின்றார்.