நெடுவினா நீங்கள் அறிந்த மூன்று சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
Answers
9th Tamil Boke PageNa127 Answer Here
Explanation:
முத்துலெட்சுமி:-
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
மூவலூர் இராமாமிர்தம்:-
தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர்
திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
நீலாம்பிகை அம்மையார்:-
மறைமலையடிகளின் மகள் ஆவார்.
தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு,பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.