வடமொழி எழுத்துக்கு எத்தனை மாத்திரை?
Answers
Explanation:
வணக்கம்
தமிழ் கற்பிப்போம், இரண்டாவது பகுதியில் நாம் காணவிருப்பது. வடமொழி எழுத்துக்களைப் பற்றியும், மாத்திரைகளின் காலஅளவுகளைப்பற்றியும், தமிழ் எண்களைப்பற்றியும் காணலாம்.
நீங்கள் தமிழ் எண்களைத்தெரிந்து, பயன்படுத்தாமல் இருப்பவர்களைவிட, தமிழராக பிறந்து தமிழ் எண்களைப்பற்றித் தெரியாமல் வாழ்ந்து வருவது முற்றிலும் ஏற்புடையாக இல்லை. இது அவர்களுக்கான பதிவு.
உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு, நம் தமிழுக்கு உண்டு. வந்தாரை எல்லாம் வாழவைத்து அழகு பார்த்த சிறப்பு, தமிழுக்கும், தமிழருக்கும் உண்டு என்பதனை நாம் வடமொழி கலப்பின் மூலம் அறிந்துகொள்ள முடியும். தமிழ்மொழியில் கலந்து வாழ்ந்திருந்த வடமொழி எழுத்துக்கள், ஜ, ஷ, ஸ, ஹ, என்பனவாகும். இவற்றோடு க்ஷ, ஸ்ரீ என்னும் கிராந்த எழுத்துக்களும் கலந்து வருகின்றன. இவை தற்க்கால தமிழில் அரிதாக காணப்படுகின்றன.