தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை. பனை வெறும் மரம் அல்ல. தமிழரின் அடையாளம். நீர்நிலைகளை காக்க நம் முந்தைய தலைமுறையினர் நீர்நிலைகளை சுற்றி பனை மரங்களை வளர்த்தனர். ஒரு தாவரத்தின் எல்லா பாகங்களும் பயன் தருவது பனைக்கு உள்ள சிறப்பு. எல்லா பாகங்களும் பயன் தருவதாக கருதப்படும் பனையில் நாற்றான கிழங்கும் உண்ணத் தகுந்தது. எத்தனையோ பஞ்சங்களில் கூட பனங்கிழங்கு உணவாக பயன்படுகிறது. இதன் வேர்கள் மிகவும் கொத்தாக பக்க வேர்கள் போன்று இருக்கும். இதன் ஆயுள் அதிகம். குறைந்தது மூன்று தலைமுறைகள் இருக்கும். தூக்கணாங்குருவிகள் பொதுவாக இம்மர ஓலையில் கூடு கட்டும். பனைமரத்திலிருந்து நுங்கு, பனை வெல்லம், பதநீர், பனம்பழம் கிடைக்கிறது. பதநீர் காய்ச்சப்பட்டு இதிலிருந்து கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மரம் "பனை” என்று படித்தால் மட்டும் போதாது. பனையை காப்போம்: நீர்வளம் பெற்று நற்பயன் அடைவோம்.
பூர்த்தி செய்க:
1.பனைமரத்தின் வேர்கள். இருக்கும்.
அ) அகலமாக
ஆ) நீளமாக இ) கொத்தாக
2. பனைமர ஓலையில் பறவை கூடு கட்டும்.
அ) குயில் ஆ) தூக்கணாங்குருவி இ) காகம்
3.பஞ்சங்களில் கூட உணவாகப் பயன்படும்.
அ) பனங்கற்கண்டு ஆ) கருப்பட்டி இ) பனங்கிழங்கு
4.நம் முந்தைய தலைமுறையினர். வளர்த்தனர். காக்க பனைமரங்களை அ) நீர்நிலைகளை ஆ) இல்லங்களை இ) கோவில்களை
5. பனை மரம் குறைந்தது தலைமுறைகள் இருக்கும். அ) மூன்று ஆ) ஐந்து இ) ஏழு
Answers
Answered by
0
Answer:
1) இ) கொத்தாக
2)ஆ) தூக்கணாங்குருவி
3) இ) பனங்கிழங்கு
4) அ) நீர்நிலைகள்
5) அ) மூன்று
Answered by
0
எம்மாம் பெரிய கொஸ்டின் என்னால முடியாது தேவையானது ஒன்லி ஒன்
Similar questions