India Languages, asked by Jaipur08, 8 days ago

தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் குறித்த செய்திகளை , நாளிதழ்களிலிருந்தோ புத்தகங்களிலிருந்தோ திரட்டிச் செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக​

Answers

Answered by lachmeetkaur
23

தமிழகத்தில் அகழாய்வுமேற்கொள்ளப்பட்ட இடங்கள்:

பழைய கற்காலம் குறித்த அகழாய்வுகள், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொற்றலை ஆற்றுப் பகுதியான பூண்டியைச் சுற்றியுள்ள இடங்களில்தான் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. பூண்டி, குடியம், நெய்வேலி, வடமதுரை, அத்திரம்பாக்கம், பரிக்குளம் போன்றவை பிற இடங்களாகும்.

இந்திய அரசு தொல்லியல் துறையின் கே.டி.பானர்ஜி - நெய்வேலி (1962-67), குடியம் (1962-64), பூண்டி (1965-68), வடமதுரை (1966-67), அத்திரம்பாக்கம் (1963-71); சாந்தி பப்பு (1999-2006) - சர்மா மரபியல் ஆய்வு மையம், சென்னை மற்றும் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை (2006) சார்பில் பல்வேறு காலகட்டங்களில், தமிழகத்தில் பழைய கற்கால அகழாய்வுகள் நடத்தப்பட்டு பல புதிய தகவல்கள் வெளிக்கொணரப்பட்டன.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற மண்ட உதவி இயக்குநர் து.துளசிராமன் அவர்கள், தமிழகப் பழைய கற்காலக் கற்கருவிகள் மற்றும் தொல்பழங்கால இடங்களான குடியம், அத்திரம்பாக்கம் பகுதிகளில் தீவிரமான கள ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 107 இடங்களில் பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளதையும் அவர் குறித்துள்ளார். இவரது கள ஆய்வுத் தகவலின்படி, பரிக்குளம் என்ற இடத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணியை மேற்கொண்டது. இந்த அகழாய்வின் முடிவில், இப்பகுதியில் இங்கு பழைய கற்காலக் கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறை இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது

PLEASE MARK ME AS BRAINLIST

Similar questions