வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம் மதுரை மாநகரம் . இனிய தமிழ் வளர்த்த இந்நகரம் பாண்டி நாட்டில் உள்ளது . இது தமிழகத்தில் உள்ள பழைய நகரங்களுள் மிகப் பழைய நகரமாகும் . இதன் பழமை ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு குறையாது . பாண்டியர் காலத்தில் இது பாண்டி நாட்டின் தலைநகரமாயிருந்தது . கி.பி .1310 ல் ஏற்பட்ட மாலிக்கன் படையெடுப்பாலும் அதற்குப்பின் வந்த இரண்டு முஸ்லீம் இனப் படையெடுப்புகளாலும் மதுரை நாட்டு ஆட்சி முஸ்லீம்கள் வசமாயிற்று . மதுரையில் 48 ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சி நடைபெற்றது . விஜய நகர அரசர் காலத்தில் இரண்டாம் கம்பணர் , முஸ்லீம் ஆட்சியை ஒழித்துத் தமிழகத்தை விஜயநகர பேரரசுக்குள் இணைத்துவிட்டார் . இப்பேரரசின் சார்பில் மதுரை விசுவாத நாயக்கரின் ஆட்சியில் இருந்து வந்தது . இந்த நாயக்கர் பரம்பரையில் வந்த திருமலை நாயக்கர இன்றைய மதுரையைக் கலைநிறைந்த அழகிய நகரமாக்கினார் . இன்று மதுரை , கலைமிக்க நன்னகராயும் , விழா நகரமாயும் , கல்வி தொழில் மிக்க பொன்னகரமாயும் விளங்குகிறது . " தமிழ்கெழுகூடல் " என 66 புறநானூறும் " தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை என்று சிலப்பதிகாரமும் " மதுரைப் பெருநன் மாநகர " என்று திருவாசகமும் இந்நகரை இனிது பாராட்டுகின்றன . வினாக்கள்
1. பாண்டிய நாட்டின் தலைநகரம் எது ?
2.மதுரையில் எத்தனை ஆண்டுகள் முஸ்லீம்கள் ஆட்சி நடைபெற்றது ?
3. மதுரையைக் கலை நிறைந்த அழகிய நகரமாக்கியவர் யார் ?
4. " தமிழ்கெழுகூடல் ” எனக்கூறி மதுரையைப் பாராட்டிய நூல் எது ?
Answers
Answered by
0
Answer:
i)மதுரை
ii)மதுரையில் 48 ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சி நடைபெற்றது
iii)திருமலை நாயக்கர இன்றைய மதுரையைக் கலைநிறைந்த அழகிய நகரமாக்கினார்
iv)" தமிழ்கெழுகூடல் " என்றது 66 புறநானூறு
Similar questions
Math,
1 day ago
Science,
1 day ago
Computer Science,
1 day ago
Math,
2 days ago
History,
8 months ago