பத்தியைப் படித்து கேட்கப்படும் விணக்களுக்கு விடையளி (0)
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து ஆகும்.
இப்பெயர் அது நிகழத்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.
கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது. திறந்த
வெளியை ஆடுகளமாக்கி ஆடை, அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்
படுகிறது. களத்து மேடைகளில் நடத்தப்பட்ட தெருக்கூத்து தெருச் சந்திப்புகளிலும்
நடத்தப் படுகிறது. பின்னர் கோவில் சார்ந்த கலையாகவும், ஆக்கப்பட்டது. இதில்
ஒரு கதையை இசை
வசனம்,
ஆடல்
மெய்ப்பாடு ஆகியவற்றை
ஒருங்கிணைத்து வழங்குவர். திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது
இருக்கிறது.
பாடல,
வினாக்கள்
1. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை எது?
2 தெருக்கூத்திற்கான ஆடுகளம் எது?
1. கோவில் சார்ந்த கலை எது?
4. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியானது எது?
5. நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது எது?
Answers
1. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை எது?
விடை: நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை தெருக்கூத்து ஆகும். கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது. இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல் , மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்.
2. தெருக்கூத்திற்கான ஆடுகளம் எது?
விடை: தெருக்கூத்திற்கான ஆடுகளம் திறந்த வெளி ஆகும். ஆடை, அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது.
3. கோவில் சார்ந்த கலை எது?
விடை: தெருக்கூத்து கோவில் சார்ந்த கலை ஆகும். இது திரெளபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகும்.
4. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியானது எது?
விடை: திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக அமைவது தெருக்கூத்து ஆகும்.
5. நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது எது?
விடை: நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது தெருக்கூத்து ஆகும்.