India Languages, asked by knjagan05540, 9 months ago

0 points
கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சியான
விடையைத் தேர்வு செய்து எழுதுக.
511=5
தமிழில் வழங்கும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று கலம்பகம். புயவகுப்பு,
அம்மானை, மறம், குறம் முதலிய பதினெட்டு உறுப்புகள் அமைய, நால்வகைப் பா
இனங்களும் கலந்து வர அந்தாதித் தொடையாக நூறு செய்யுள்களால் பாடப்படுவது
கலம்பகம். தில்லையில் எழுந்தருளியுள்ள இறைவன் சிவபெருமான் மீது
பாடப்பெற்றமையால் 'தில்லைக்கலம்பகம்' என்னும் பெயரையும் இது பெற்றது.
'அம்மானை' என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று அம்மானை ஆடும்
போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர். அப்பாடலில் ஒருத்தி ஒரு
கருத்தைக் கூறுவாள். இன்னொருத்தி அக்கருத்தை ஒரு வினா எழுப்பி மறுப்பாள்.
மற்றொருத்தி அவ்விருவருக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தியை விடையாகக்
கூறுவாள். இங்ஙனம் பாடிக்கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது அம்மானை
விளையாட்டாகும்.
வினாக்கள்:
1. கலம்பகம் எந்த வகைகளுள் ஒன்று
அ) இதிகாச இலக்கியம்
ஆ) பிரபந்த இலக்கியம்
இ) பேரிலக்கியம்
ஈ) சிற்றிலக்கியம்​

Answers

Answered by devguru01
3

சிற்றிலக்கியம். இதுவே சரியான பதில்

Answered by namithsivaprakash200
1

Answer:

1 சிற்றிலக்கிய வகை

hope it helps

Similar questions