India Languages, asked by ashan37, 1 year ago

1. காற்றின் பல்வேறு பெயர்கள் யாவை?​

Answers

Answered by Sh410Playz
49

தமிழில் பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் அறிவியலில் இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன.

தட்பவெப்பவியலில், காற்றுக்களை அவற்றின் வலு, எத்திசையில் இருந்து வீசுகிறது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடுவது வழக்கம். குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று வன்காற்று(gust) எனப்படும். ஏறத்தாழ ஒரு நிமிட நேரம் போன்ற இடைத்தரக் கால அளவுக்கு வீசும் பலமான காற்று பாய்புயல் (squall) எனப்படுகின்றது. நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. புயல், சூறாவளிபோன்ற பெயர்கள் இவ்வாறான காற்றுக்களுக்கு வழங்கும் பெயர்கள் ஆகும்.

தமிழிலும் பண்டைக் காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுகளுக்குத் தனித்தனியான பெயர்கள் இட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று

சோழகம் - தெற்கில் இருந்து வீசும் காற்று

கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று

கச்சான் (காற்று) - மேற்கில் இருந்து வீசும் காற்று

இந்த அடிப்படையில் தென்மேற்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கச்சான் என்றும், தென்கிழக்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கொண்டல் என்றும் பெயர் பெறுகின்றன. தெற்கில் இருந்து வீசும் மென்மையான காற்றைத் தென்றல் என்பர்.

Answered by ZareenaTabassum
1

விடை:

காற்றின் பல்வேறு பெயர்கள்

  • வளி,
  • தென்றல்,
  • புயல்,
  • சூறாவளி.

  • காற்றுக்கள் பல்வேறு வகையாகப் பல்வேறு மட்டங்களில் உருவாகின்றன.
  • நிலப்பகுதிகள் வேறுபட்ட அளவுகளில் சூடாவதன் காரணமாக சிறிய நிலப்படுதிகளில் வீசும் காற்று உருவாகின்றது. கடல், நிலம் என்பவற்றின் வேறுபாடான சூடாகும் தன்மை காரணமாகவும் கடலிலிருந்தும், நிலப் பகுதியிலிருந்தும் மாறிமாறிக் காற்று வீசுவதைக் காண முடியும்.
  • புவியின் வேறுபட்ட தட்பவெப்ப வலயங்கள் வேறுபட்ட அளவில் சூரிய ஆற்றலை உறிஞ்சுவதன் காரணமாக உலகு தழுவிய அளவில் காற்றோட்டங்கள் ஏற்படுகின்றன.
  • வெப்பவலயப் பகுதிகளில், தாழ் வெப்பம் காரணமாக சமநிலங்களும், மேட்டுநிலப் பகுதிகளும் பருவப்பெயர்ச்சிக் காற்றோட்டங்களை ஏற்படுத்தலாம். கடற்கரையோரப் பகுதிகளில் கடற்காற்று நிலக்காற்றுச் சுழற்சிகள் குறித்த பகுதிகளின் காற்றோட்ட நிலைமைகளுக்குக் காரணமாகின்றன.

காற்றின் பயன்கள்:

  • உயிர் வளி தந்து உயிர்களைக் காக்கிறது
  • தாவரங்களின்  ஒளிச்சேர்க்கை
  • விதைகளை எடுத்து தூவுதல்
  • பூ,தேன், கனி, தாவரம் உயிரினத்தின் மணம் – இப்படி, உயிர்ச்சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க உதவுகிறது
  • நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளம் பாதுகாத்தல்
  • தொலைத்தொடர்பின் மையம்
  • காற்றுள்ளபோதே மின்சாரம்
  • புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண்
  • புவியைப் போர்வை போல சுற்றி பரிதியின் கதிர் சூட்டைக் குறைக்கிறது.

SPJ3

Similar questions