1.ஏதேனும் ஒரு இரட்டுற மொழிதல் பாடலையும் அதற்கான பொருளையும் குறிப்பிடுக.
Answers
Answer:
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது
பாம்புக்கும் எள்ளுக்கும்:
பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும். படமெடுத்து ஆடும்போதே 'உச்' என்று இரையும். பாம்பாட்டி பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும். ஓடிப்போய் மண்ணால் செய்த மண்டை ஓட்டில் சுருண்டு படுத்துக்கொண்டு பரபர என ஒலி வருமாறு அசையும். பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கு உண்டு.
எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும். செக்கில் ஆட்டப்படும்போது செக்கின் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும். நம் தலை மண்டைக்குள் ஓடிப் பரபர என்று தேய்க்கப்படும். பார்க்கப்போனால் அதற்குப் பிண்ணாக்கு உண்டு.
Explanation: answer