பொருத்துக அ) நேரிசை ஆசிரியப்பா - 1) முதலடியும் இறுதியடியும் அளவடிகளாய் வரும் ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா - 2) அடிகளை மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாது வரும். இ) நிலைமண்டில ஆசிரியப்பா - 3) இறுதி அடியின் முந்தைய அடி சிந்தடியாய் வரும். ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா - 4) எல்லா அடிகளும் அளவடி பெற்று வரும்.
Answers
Answered by
0
பொருத்துதல்
- அ-3, ஆ-1, இ-4, ஈ-2
நேரிசை ஆசிரியப்பா
- நேரிசை ஆசிரியப்பா என்பது இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களையும் (சிந்தடி), மற்ற அடிகள் நான்கு சீர்களை பெற்று வருவது ஆகும்.
இணைக்குறள் ஆசிரியப்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா என்பது முதல் மற்றும் இறுதி அடிகள் நான்கு சீர்களையும் (அளவடி), இடையடிகள் இணை இணையாய் இரண்டு அல்லது மூன்று சீர்களை பெற்று வருவது ஆகும்.
நிலைமண்டில ஆசிரியப்பா
- நிலை மண்டில ஆசிரியப்பா என்பது எல்லா அடிகளும் நான்கு சீர்களை (அளவடி) கொண்டதாக வருவது ஆகும்.
அடிமறி மண்டில ஆசிரியப்பா
- அடிமறி மண்டில ஆசிரியப்பா என்பது பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசை மற்றும் பொருள் மாறாமல் வருவது ஆகும்.
Answered by
0
Answer
- மறுவிலாத
- அரசென
- இருந்த
- மாநகர்
Similar questions