"வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக. அ) பாலை பாடினான் - 1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான் . ஆ) பாலைப் பாடினான் - 2) தேரினைப் பார்த்தான் இ) தேரை பார்த்தான் - 3) பாலினைப் பாடினான் ஈ) தேரைப் பார்த்தான் - 4) பாலைத் திணை பாடினான் (அ) 4, 1, 3, 2 (ஆ) 2, 3, 1, 4 (இ) 4, 3, 1, 2 (ஈ) 2, 4, 1, 3"
Answers
Answered by
1
is clever ke bare hum logo ke navin prerna ke navin
Answered by
4
4, 1, 3, 2
பாலை பாடினான்
- பாலை என்ற சொல் ஆனது ஐந்திணைகளில் ஒன்றான பாலை திணையை குறிக்கிறது.
- எனவே இது பாலைத் திணை பாடினான் என்பதைக் குறிக்கிறது.
பாலைப் பாடினான்
- இரண்டாம் வேற்றுமைக்கு பிறகு வல்லினம் மிகும்.
- எனவே பாலை (பால் + ஐ) என்ற சொல்லிற்கு பிறகு ப் என்ற வல்லினம் சேர்ந்து வந்துள்ளது.
- எனவே இது பாலினைப் பாடினான் என்பதைக் குறிக்கிறது.
தேரை பார்த்தான்
- தேரை என்ற சொல் ஆனது தவளையை போன்ற உயிரினத்தினைக் குறிக்கிறது.
- எனவே இதில் வல்லினம் மிகாது.
- இது தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான் என்பதைக் குறிக்கிறது.
தேரைப் பார்த்தான்
- தேரை என்ற சொல் ஆனது தெய்வங்களை சுமந்து செல்லும் தேரினைக் குறிக்கிறது.
- இரண்டாம் வேற்றுமைக்கு பிறகு வல்லினம் மிகும் என்பதால் தேரைப் பார்த்தான் என வந்துள்ளது.
- இது தேரினைப் பார்த்தான் என்பதை குறிக்கிறது.
Similar questions
Math,
4 months ago
India Languages,
4 months ago
Science,
4 months ago
English,
9 months ago
Math,
1 year ago