கூற்று 1: காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது. கூற்று 2: ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
Answers
Answered by
0
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
காப்பியம்
- காப்பியம் என்னும் சொல் ஆனது காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
- காப்பியம் என்ற சொல் ஆனது வடமொழியில் காவியம் எனவும், ஆங்கிலத்தில் EPIC எனவும் குறிப்பிடப்படுகிறது.
- ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் மயிலைநாதர் ஆவார்.
- பொருள் தொகை நிகண்டு, திருத்தணிகை உலா முதலிய நூல்கள் பெருங்காப்பியங்கள் ஐந்து எனக் குறிப்பிட்டு அதன் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளன.
- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
- சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம் முதலியன ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும்.
Similar questions