ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்… தொடர்களில் வெளிப்படும் செய்திகள் 1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள். 2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள். அ) 1 சரி 2 தவறு ஆ) 1 தவறு 2 சரி இ) 1 தவறு 2 தவறு ஈ) 1 சரி 2 சரி
Answers
Answered by
0
1 சரி 2 சரி
சிலப்பதிகாரம்
- கோவலன், கண்ணகி, மாதவி என பொது மக்களைப் பற்றி இயற்றப்பட்ட தமிழின் முதல் காப்பியம் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஆகும்.
- புகார், மதுரை, வஞ்சி என மூன்று காண்டங்களின் வாயிலாக சோழ, பாண்டிய, சேர நாட்டினை பற்றி கூறுவதால் இது மூவேந்தர் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.
- மேலும் இயல், இசை, நாடகம் என மூன்றும் உள்ளதால் முத்தமிழ் காப்பியம் எனவும், செய்யுள், உரைநடை, பாடல் என மூன்றாகவும் உள்ளதால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்த நூலில் உள்ள ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்… தொடர்களில் வெளிப்படும் செய்திகள் மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
- தன் ஈராறு (12) வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள் என்பது ஆகும்.
Similar questions