India Languages, asked by tamilhelp, 9 months ago

" கீழ்க்கண்ட ஜீன்‌ மாற்றத்தால்‌ உருவாக்கிய பொருட்களின்‌ பயன்களை எழுதுக.
பொருள்‌ பயன்கள்‌
(1) இண்டர்‌ ஃபெரான்‌ -
(2) இன்டர்‌ லியூக்கின்‌ -
(3) ரெனின்‌ தடுப்பான்கள்‌ -"

Answers

Answered by uttampcity
0

Answer:

I can't explain it because this is out of language

Answered by anjalin
0

1. இண்டர்பெரான்கள்:

  • பாலூட்டிகளின் செல்கள் வைரஸ்களால் பாதிக்கப்படும் போது, அச்செல்களால் உற்பத்தி செய்யப்படும், சிற்றினக் குறிப்பீடு தன்மையுடைய, புரத்தாலான வைரஸ் எதிர்ப்புப் பொருட்கள் ‘இண்டர்பெரான்கள்” எனப்படும்.
  • இண்டர்பெரான்கள்  வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்ட்டுகள் ஆகியவற்றால் சுரக்கக் கூடிய கிளைக்கோப்புரத மூலக்கூறுகள் ஆகும்.
  • அலிக் ஐசக்ஸ் மற்றும் ஜீன் லின்ட்மேன் ஆகியோர்களால் 1957-ம் ஆண்டு இண்டர்பெரான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • செல்லில் உள்ள டி.என்.ஏ-வினை தூண்டி, வைரஸ் எதிர்ப்பு நொதிகளைச் சுரக்கச் செய்து அதன் மூலம் வைரஸ்களின் பெருக்கத்தைத் தடுத்து செல்களை பாதுகாக்கின்றன.
  • புற்றுநோய், எய்ட்ஸ், தண்டுவட மரப்பு நோய், கல்லீரல் அழற்சி, அக்கிப்புடை போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் இண்டர்பெரான்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இண்டர்பெரான்களினால் அருகாமையிலுள்ள பிற செல்களும் வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
  • இதனால் மனிதரில் வைரஸ் தாக்கத்தை எதிர்க்கும் திறன் மேலும் அதிகரிக்கிறது.

2. இன்டர்லியூக்கின்கள்:

  • இன்டர்லியூக்கின்கள் என்பது சிறிய புரதங்களின் பரந்த மற்றும் தளர்வான வகையாகும்.
  • நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்த உதவும், நோய் எதிர்ப்பு மண்டலத்திலுள்ள உயிரணுக்களால் சுரக்கப்படும் பல்வேறு புரத மூலக்கூறுகளின் தொகுப்பாகும்.
  • நோய் எதிர்ப்பு திறன் பெற்ற இரத்த வெள்ளையணுக்கள் பெருக்கத்தை தூண்டுகிறது.
  • நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் இன்டர்லியூக்கின்களை பொறுத்தே அமைகிறது.
  • பெரும்பாலானவை CD-4 T லிம்போசைட்டுகள் மற்றும் மோனோசைட்டுகள், மேக்ரோபேஜ்கள் மற்றும் எண்டோலியல் செல்கள் மூலம் ஒருங்கிணக்கப்படுகின்றன.
  • அவை, டி மற்றும் பி லிம்போசைட்டுகள் மற்றும் ஹெமாட்டோபாய்டிக் செல்கள் வளர்ச்சி மற்றும் வேறுபாட்டை ஊக்குவிக்கின்றன.
  • இன்டர்லியூக்கின்கள் நோய் எதிர்ப்பு உயிரணுக்களுக்கிடையே தகவல் பரிமாற்றம், நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் பெருக்கம் மற்றும் வேறுபாடு, நரம்பு செல்கள், எண்டோகிரைன் செல்கள் ஆகிய செயல்களுக்கு தூண்டுவதற்கு பயன்படுகின்றன.

3. ரெனின் தடுப்பான்கள்:

  • ரெனின் தடுப்பான்கள் என்பது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மருந்துகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.

Similar questions