"அ) குழந்தை பிறப்பு - 1) கருவுறுதலுக்கும் குழந்தை பிறப்பிற்கும் இடைப்பட்ட கால அளவு ஆ) கர்ப்ப காலம் - 2) கருவுற்றமுட்டை எண்டோமெட்ரியத்தில் பதிவது இ) அண்ட அணு வெளியேற்றம் - 3) கருப்பையிலிருந்து குழந்தை வெளியேற்றம் ஈ) கரு பதித்தல் - 4) கிராஃபியன் பாலிக்கிள்களிலிருந்து முட்டை வெளியேறுதல். "
Answers
Answered by
0
Explanation:
sorry....I don't know..
Thanks for free answer.
Answered by
0
பொருத்துதல்
- அ - 3, ஆ - 1, இ - 4, ஈ - 2
குழந்தை பிறப்பு
- குழந்தை பிறப்பு என்பது கர்ப்ப கால முடிவில் தாயின் கருப்பையில் இருந்து சேய் ஆனது வெளியே வரும் நிலை என அழைக்கப்படுகிறது.
கர்ப்ப காலம்
- கருவுறுதலுக்கும் குழந்தை பிறப்பிற்கும் இடைப்பட்ட கால அளவே கர்ப்ப காலம் என அழைக்கப்படுகிறது.
- பொதுவாக மனிதர்களின் கர்ப்ப காலம் 280 நாட்கள் ஆகும்.
- கருப்பையானது கர்ப்ப காலத்தில தன் இயல்பு நிலையில் இருந்து 500 மடங்கு வரை விரிவடைகிறது.
அண்ட அணு வெளியேற்றம்
- கிராஃபியன் பாலிக்கிள்களிலிருந்து முட்டை வெளியேறுதலுக்கு அண்ட அணு வெளியேற்றம் என்று பெயர்.
கரு பதித்தல்
- கருவுற்ற பின்பு 6 முதல் 7 நாட்களுக்குள் கருமுட்டை ஆனது பிளாஸ்டோசிஸ்ட் என்னும் நிலையில் எண்டோமெட்ரியம் என்ற கருப்பையின் சுவரில் பதிய வைக்கப்படுகிறது.
- இந்த நிகழ்விற்கு கரு பதித்தல் என்று பெயர்.
Similar questions